லண்டன் விவகாரத்து வழக்கில் தீர்ப்பு பெண்ணுக்கு ரூ.3,753 கோடி ஜீவனாம்சம்

பதிவு செய்த நாள் : 13 மே 2017 09:04லண்டன்:

லண்டனில் விவகாரத்து தொடர்பான வழக்கில் பெண்ணுக்கு சுமார் ரூ. 3,753 கோடி ஜீவனாம்சம் வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

கிழக்கு ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண் ரஷ்யா மாஸ்கோவில் படிக்க சென்றார். அங்கு 1989ம் ஆண்டு ஒருவரை சந்தித்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன.

கடந்த 1993ம் ஆண்டு தம்பதி இருவரும் லண்டனுக்கு இடம்பெயர்ந்தனர். தம்பதி இருவக்கும் இடையே கருத்து வேறு ஏற்பட்டதால் பிரிய முடிவு செய்தனர். விவகாரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஹடான் கேவ், பெண்ணுக்கு ரூ.3753 கோடி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டார்.

தற்போது அந்த பெண்ணுக்கு 40 வயதாகிறது. அவரது கணவருக்கு 61 வயதாகிறது. சொத்துக்களின் விபரத்தை மதிப்பிட்டு இந்த ஜீவனாம்சம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். லண்டனில் வழங்கப்பட்ட ஜீவனாம்ச தொகையில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.