வேஸ்டில் பெஸ்ட் இது!

பதிவு செய்த நாள் : 05 மே 2017

உல­கில் பால் உற்­பத்­தி­யில் முன்­ன­ணி­யில் நிற்­கும் நாடு டென்­மார்க். அதன் தலை­ந­கர் கோபன்­ஹே­கன். தாமஸ் டேம்போ என்­கிற தச்­சுக் கலை­ஞர் வரு­டத்­தில் இரண்டு மாதம் எந்­தக் கட்­ட­ண­மும் வாங்­கா­மல் வீணா­கிப் போகும் கட்­டை­க­ளில் ஆங்­காங்கே பூங்கா மற்­றும் காட்­டுப் பகு­தி­க­ளில் பெரிய பெரிய பொம்­மை­களை செய்து வரு­கி­றார். பார்ப்­ப­தற்கு மிக அழ­கா­க­வும் அள­வில் பெரி­ய­தா­க­வும் இருக்­கும் இந்த பொம்­மை­க­ளில் குழந்­தை­கள் வந்து விளை­யாடி வரு­கின்­ற­னர். அரு­கில் உள்ள வனப்­ப­கு­தி­யில் இவர் அமைத்­தி­ருக்­கும் குரங்­கின் பொம்­மை­யைப் பார்க்க நக­ரின் பல பகு­தி­க­ளில் இருந்து மக்­கள் வந்­த­வண்­ணம் உள்­ளார்­கள்.

“பொது­வாக வரு­டத்­தில் இரண்டு மாதம் டூர் என்று கும்­மா­ளம் அடித்­துக் கொண்­டி­ருந்­தேன். கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இது­போன்ற மக்­கள் பணி­யைச் செய்து வரு­கி­றேன். வழி­யில் பார்ப்­ப­வர்­கள் எல்­லாம் என் கையைக் குலுக்­கு­கி­றார்­கள். ஏன்… செனட் பத­விக்கு நின்­றால் கூட ஜெயித்து விடு­வேன் போலி­ருக்­கி­றது.” என்று கூறி சிரித்­தார் தாமஸ்.