![]() | ![]() |
பிளஸ் 2 முடித்த பின் தங்கள் பிள்ளையை மேற்படிப்புக்காக நல்ல கல்லூரியை தேர்ந்தெடுக்க பெரும்பாலான பெற்றோர் சிரமம்படுகின்றனர். இதில் பெற்றோர் மட்டுமில்லை மாணவர்களும்தான். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை போக்கிறார் பேராசிரியர், கல்வியாளர், முனைவர் மாதவன்.
"பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மிக விரைவில் வர உள்ளது. அதில் எவ்வளவு மதிப்பெண் நீங்கள் எடுத்து இருக்கிறீர்களோ அதை பொருத்துதான் எந்த கல்லூரியில் சேர முடியும் என்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
சில கல்லூரிகள் காலம்காலமாக மிகப் பிரபலமாக இருக்கும். அதை ஆராய்ந்தோமானால் தக்க காரணங்கள் நமக்கு புலப்படும். அத்தகைய கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கதான் பெரும்பாலான பெற்றோர் விருப்படுவார்கள்.
இப்போது எந்த பிரிவு தேர்ந்தெடுக்கலாம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால், அப்பிரிவை எந்த கல்லூரியில் எடுக்கலாம் என்பதில்தான் கணிசமான பெற்றோரும், மாணவர்களுக்கும் தெளிவில்லாமல் உள்ளனர். இதற்காக சரியாக திட்டமிடாததால் கடைசி நிமிடத்தில் கிடைக்கும் ஏதோ ஒரு கல்லூரியில் தங்கள் பிள்ளையை பெற்றோர் சேர்த்து விடுக்கின்றனர். பின்னர் பிள்ளை படித்து முடிக்கும் வரையிலான காலம்வரை பெற்றோரும் அவர்களும் பலவிதமான கஷ்டங்களை சந்திக்கின்றனர்.
ஆகவே, இத்தகைய தொல்லைகளுக்கு மாணவர்களும் பெற்றோரும் ஆளாகாமல் இருக்க. நான் கூறபோகும் காரணங்களை கொஞ்சம் படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறப்பது உறுதி.
எந்த நகரிலும் பிரபலமான ஒன்றிரண்டு கல்லூரிகள் கட்டாயம் இருக்கும். அக்கல்லூரிகளில் அனைவரும் சேர வாய்ப்பு கிடைக்காது. அதனால் வெகு தொலைவிலிருக்கும் கல்லூரியில் பிள்ளையை சேர்த்து விடுவீர்கள். பிள்ளையின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் சேர்த்து இருப்பீர்கள். அவை உங்கள் அருகிலுள்ள கல்லூரியிலும் உங்கள் பிள்ளைக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. நான் சொல்லபோகும் காரணகாரணிகள் அக்கல்லூயில் இருந்தால் தாராளமாக உங்கள் பிள்ளையை சேர்க்க பயபடவேண்டாம்.
![]() | ![]() |
இப்போது பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளை படித்து முடித்த அடுத்த நொடியிலேயே பணிக்கு செல்ல வேண்டுமென்று நினைக்கின்றனர். அவ்வாறு எண்ணுவதில் தவறேதும் இல்லை. ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்க முன் அக்கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ இருக்கின்றதா என பார்க்கின்றனர். அவை வேலைவாய்ப்புக்கான நுழைவு கல்வி என கருதுகிறார்கள். இதை தங்களுக்கு சாதமாக எடுத்துக் கொண்டு பல கல்லூரிகள் நூறு சதவீதம் பிளேஸ்மெண்ட் உள்ள கல்லூரி என்று விளம்பரபடுத்திக் கொள்கிறார்கள். அதை அப்படியே நம்பி விடவேண்டாம். முதலில் அக்கல்லூரிலிருந்து பிளேஸ்மெண்ட் மூலம் வேலை கொடுத்த நிறுவனங்கள் எவை என்று பாருங்கள்.
இந்த கல்லூரி மூலம் தன் பிள்ளைக்கு ஏதோயொரு வேலை கிடைத்துவிடும் என பகல் கனவு காணாதீர். பாடத்தில் அரியர்ஸ் வைத்திருந்தால் பிளேஸ்மெண்ட் கிடையாது என்பதை முதலில் கருத்தில் கொள்ளுங்கள். அக்கல்லூரிலிருந்து படித்து முடித்த அனைவருக்கும் 100 சதவிகதம் வேலை கிடைத்து இருக்கிறதா இல்லை நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு மட்டுமே 100 சதவிகிதம் வேலை கிடைத்திருக்கும் என்பது முக்கியமான விஷயமாகும்.
கிராமங்களிலிருந்து பெரும் நகரங்களிலுள்ள கல்லூரிகளில் படிக்க வரும் மாணவர்களுக்கு மனதளவில் ஒரு மாற்றமும் வாழ்க்கை முறையில் ஒரு மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரும் நகரத்து மாணவர்களை போல் அவர்களால் சாரளமாக ஆங்கிலம் பேச வராவிட்டால் ஒருவித தாழ்வு மனபான்மைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதை எதிர்த்து நிற்கும் மனநிலை அவர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டும்.
கல்லூரி விடுதியில் தங்கிதான் படிக்க வேண்டுமென்ற சூழ்நிலை ஏற்படால் அந்த விடுதிக்கு நேரடியாக சென்று பாருங்கள். நீங்கள் மட்டும் சென்று பார்ப்பது சரியில்லை. படிக்கபோகும் உங்கள் பிள்ளையும் உடன் அழைத்து செல்லுங்கள். முதலில் அங்கு பார்க்க வேண்டியது. அந்த விடுதியில் படிப்பதற்கான தகுந்த சூழ் நிலை இருக்கின்றதா, ஏன்னெனில் சில விடுதிகள் இரவு பத்து மணிகெல்லாம் விளக்கை அனைத்து விடுகின்றனர். மேலும், மனதளவில் தாக்கக்கூடிய வேண்டபடாத கட்டுபாடுகள் விதிக்கலாம். உதாரணமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பார்கள். விடுதி மெஸில் என்ன மாதிரியான உணவுகள் வழங்கப் படுகின்றன என கேளுங்கள். விடுதியில் மாணவர்கள் தங்கும் அறை எவ்வளவு பெரியது, ஒர் அறையில் எத்தனை மாணவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
முன்பெல்லாம் லேப் என்றாலே அறிவியல் ஆய்வு கூடங்களை குறிப்பதாக பொருள் இருந்தது. இன்று அந்த லேப் பல விதமான பொருட்களை தாங்கி நிற்கின்றன. இப்போது பல கல்லூரிகளில் லேங்வேஸ் லேப் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். அதன் மூலம் மாணவர்களுக்கு ஆங்கலம் பேச கற்றுக்கொடுப்பதோடு மனதளவில் வேலைக்கு எவ்வாறு தயாராவது எப்படியென்ற பயிற்சியும் அளிக்கப் படுகிறது. அதுபோன்ற பயிற்சிகள் உங்கள் பிள்ளை சேர இருக்கும் கல்லூரியில் கொடுக்கப்படுகிறதா என்பதையும் ஆராயுங்கள்.
நூலகத்தில் பயனுள்ள நூல்கள் மட்டும் இருக்கிறதா என்பதை கவனிக்கக்கூடாது. இன்று எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டன. ஆகவே நு-லகத்தில் டிஜிட்டல் நூல்கள் இருக்கின்றதா என்பதையும் பார்க்க வேண்டும். இப்போது எங்கள் கல்லூரியில் வீடியோ கான்பரன்ஸ் வசதி இருப்பதாக விளம்பரம் படுத்துகிறார்கள். இந்த வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் துறை சார்ந்த வல்லுனர்களோடு தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் ஐய்யங்களை போக்கிக் கொள்ளமுடியும். ஆகவே, அந்த வசதியும் கல்லுரியில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பல தனியார் பொறியியல் கல்லூரிகள் நகரங்களை விட்டு மிக தொலைவில் இருக்கின்றன. அக்கல்லூரிகளுக்கு பேருந்தில் மட்டும்தான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது என்பதையும் கருத்தில் வையுங்கள்.
உங்க பிள்ளையை சேர்க்க போகும் கல்லூரிக்கு நேரடையாக சென்று அங்கு எவ்வாறு ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர் என்பதை அறியுங்கள். அது மட்டுமல்ல அங்கு படிக்கும் மாணவர்களிடமும் இதை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். பழைய மாணவர்கள் எங்கள் கல்லூரி சூப்பராக பாடம் எடுக்கும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளதீர்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
அவ்வாறு கருத்து கூறியவர் படித்த கல்விப் பிரிவு வேறாகவும் இருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் கல்விப் பிரிவு வேறாக இருக்கலாம். இப்போதெல்லாம் அற்புதமாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எந்த கல்லூரியிலும் நிலையாக இருப்பது இல்லை. எக்கல்லூரி அதிகம் சம்பளம் கொடுக்கிறதோ அக்கல்லூரிகளுக்கு தாவிக் கொண்டே இருக்கிறார்கள்.
சில கல்லூரிகள் மத்திய உணவை தங்கள் கல்லூரி கேன்டனில்தான் சாப்பிட வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார்கள். அவ்வாறு இருக்கும் எனில் அங்கு உணவு சுத்தமாக சமைக்கப்படுகிறதா என்பதை கவனியுங்கள். உங்கள் பிள்ளையை அக்கல்லூரி விடுதியில் சேர்ப்பதாக இருந்தாலும் அங்கும் இதை கவனிக்க வேண்டும். கல்லூரி அழகாக இருக்கிறது என்பதால் தேர்ந்தெடுத்திடக்கூடாது. ஒரு கல்லூரி ஆற்றின் கரையோரமாக அமைந்திருக்கலாம், மற்றொரு கல்லூரியின் எதிரே ஏரி இருக்கலாம். ஆனால், அதில் இருக்கும் நீர்நிலைகள் சுத்தமாக இல்லையேனில் அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கொசுக்கடியால் அவதிப்படலாம். சில மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கலை திறனோ இல்லை விளையாட்டு திறனோ இருக்கலாம். அத்திறனை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் நீங்கள் சேர்க்கபோகும் கல்லூரியில் இருக்கிறதா என்று பாருங்கள்.
இன்று நிகர்நிலை பல்கலைக்கழகம் என்றாலே பலர் அச்சம் படுகின்றனர். அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அவ்வாறு இருக்கும் என்பது இல்லை. அவற்றில் பல சிறந்த பல்கலைக்கழகம் உள்ளன. அவை சிறப்பாக கல்வியை போதிக்கின்றன. அவ்வாறான பல்கலைக்கழங்களை தேர்ந்தெடுத்து உங்கள் பிள்ளைகளை தயகமில்லாம் சேர்க்கலாம்.
கல்லூரியில் படிக்கும் மூன்று இல்லை நான்கு வருடங்கள் உங்கள் பிள்ளையின் வாழ்க்கையில் முக்கியமான கால கட்டம் அது. ஆகவே கல்லூரி தேர்ந்தெடுக்கும் முன் ஒன்றுக்கு பலதடவை ஆலோசித்த பின் கல்லூரியை முடிவு செய்வது சிறந்ததாக இருக்கும்" என்றார்.