சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 291 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 19 ஏப்ரல் 2017

அக்னி நட்­சத்­தி­ரம்’ திரைப்­ப­டம் வெளி­வந்து 26 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. ஆனால், இன்­றும் ஏதா­வது ஒரு பண்­ப­லை­யில் இந்­தப் படத்­தின் பாடல்­கள் ஒலித்­துக் கொண்­டி­ருக்­கும். இன்­றைய நவீ­னத்­து­வப் பாடல்­க­ளுக்­கெல்­லாம் சவால்­வி­டும் அள­வுக்கு இளை­ய­ராஜா - மணி­ரத்­னம் கூட்­ட­ணி­யில் பிர­மா­த­மாக அமைந்­தி­ருக்­கும் பாடல்­க­ளைக் கொண்ட படம். மணி­ரத்­னத்­தின் ‘நாய­கன்’ அள­வுக்கு உச்­சத்தை எட்­டா­விட்­டா­லும்­கூட, அந்­தக் கால­கட்­டத்­தில் இந்­தப் படத்­தின் வித்­தி­யா­ச­மான உரு­வாக்­கத்­துக்­கா­கப் பேசப்­பட்­டது. இரண்டு மனை­விக்­கா­ரன் கதை­தான் என்­றா­லும், அந்த மனை­வி­க­ளுக்­குப் பிறந்த இரண்டு பிள்­ளை­க­ளின் குணா­தி­ச­யங்­க­ளும், அவர்­கள் சந்­தித்­துக்­கொள்­ளும் போதெல்­லாம் ஏற்­ப­டும் மோதல்­க­ளும் விறு­வி­றுப்­பாக அமைக்­கப்­பட்டு பார்­வை­யா­ளர்­க­ளுக்கு விருந்­தாக அமைந்த இந்­தப் படம், 200 நாட்­கள் ஓடி­யது. தெலுங்­கில் ‘கர்­சனா’ என்ற பெய­ரி­லும், இந்­தி­யில் ‘வன்ஷ்’ என்ற பெய­ரி­லும் ரீமேக் செய்­யப்­பட்­டது.

 இரண்டு பொண்­டாட்­டிக்­கா­ர­ரான விஜ­ய­கு­மா­ருக்கு மூன்று பிள்­ளை­கள். முதல் தாரத்து மனை­விக்கு ஒரு பைய­னும், இரண்­டாம் தாரத்து மனை­விக்கு ஒரு பைய­னும், ஒரு பெண்­ணும் இருக்­கி­றார்­கள்.  இரண்டு மனை­வி­க­ளின் ஆண் பிள்­ளை­க­ளான பிரபு - கார்த்­திக் சந்­திக்­கும் போதெல்­லாம் முறைத்­துக் கொள்­கி­றார்­கள்; அடித்­துக் கொள்­கி­றார்­கள். இது அவ­ரு­டைய அப்­பா­வான விஜ­ய­கு­மா­ருக்கு தர்­ம­சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

 இத­னி­டையே பிர­பு­வுக்­கும், கார்த்­திக்­கும் காத­லும் ஏற்­ப­டு­கி­றது. இந்த நிலை­யில், எதி­ரி­க­ளால் அப்பா விஜ­ய­கு­மா­ருக்கு ஆபத்து ஏற்­ப­டு­கி­றது. அப்­போது கார்த்­திக்­கும், பிர­பு­வும் இணைந்து எந்­த­மா­தி­ரி­யான நிலைப்­பாட்டை எடுக்­கி­றார்­கள். அவர்­கள் இரு­வ­ரும் இணைந்­தார்­களா? என்­பது விறு­வி­றுப்­பான திரைக்­கதை. படத்­தின் கேப்­டன் மணி­ரத்­னம் என்­றா­லும், அவ­ரைத் தாண்டி இரண்டு பேர் அப்­போது கொண்­டா­டப்­பட்­டார்­கள். ஒரு­வர் இளை­ய­ராஜா, மற்­றொ­ரு­வர் ஒளிப்­ப­தி­வா­ளர் பி.சி.ஸ்ரீராம்.  பி.சி.ஸ்ரீராம் இந்­தப் படத்­தில் பல புது­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­டார். ‘நின்­னுக்­கோரி வர­ணும்’ பாட­லி­லும், கிளை­மாக்ஸ் காட்­சி­யி­லும் ஒளிச்­சி­த­ற­லின் மூலம் காட்­சி­யின் அதிர்­வைப் பார்­வை­யா­ள­னுக்­குத் தரும் உத்­தி­யைக் கையாண்­டி­ருப்­பார். ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடல் காட்சி சாதா­ரண ரயில்வே ஸ்டேஷ­னில் எடுக்­கப்­பட்­டி­ருக்­கும். ஆனால், ஒளி­ய­மைப்­பின் மூலம் மிகுந்த ரிச்­னெஸ்ûஸ கொடுத்­தி­ருப்­பார். பிர­பு­தேவா, முதன்­மு­த­லாக பாட­லில் தலை­காட்­டி­யது இந்­தப் படத்­தில்­தான்.

 வி.கே.ராம­சாமி, ஜன­க­ராஜ் கூட்­ட­ணி­யும் ‘வரு­ஷம் 16’ படம்­போல இந்­தப் படத்­தி­லும் சேர்ந்­தி­ருந்­தார்­கள். ‘பொண்­டாட்டி ஊருக்­குப் போயிட்டா’ என்ற பிர­பல வச­னம் இந்­தப் படம் மூலம் பர­வ­லா­கப் பேசப்­பட்­டது.  ‘நாய­கன்’ படத்­துக்கு முன்பே ‘அக்னி நட்­சத்­தி­ரம்’ எடுக்­கப்­பட இருந்­த­தா­க­வும், பி.சி.ஸ்ரீராம் தான் மணி­ரத்­னத்­தைத் தாம­திக்­கு­மாறு சொன்­ன­தா­க­வும் பி.சி.ஸ்ரீராமே அண்­மை­யில் ஒரு பத்­தி­ரி­கை­யில் சொல்­லி­யி­ருந்­தார்.

 தொடர்ந்து 3 ஆண்­டு­கள் படங்­க­ளில் நடிப்­ப­தைத் தவிர்த்து வந்த விஜ­ய­கு­மார், ‘அக்னி நட்­சத்­தி­ரம்’ படத்­தில் நடித்து பெரும்­பு­கழ் பெற்­றார். இதன் மூலம் திரை உல­கில் தனது 2-வது பய­ணத்தை வெற்­றி­க­ர­மா­கத் தொடங்­கி­னார்.  முத­லும் கடை­சி­யாக இந்­தப் படத்­தில் வில்­ல­னாக நடித்த ஆனந்த் தியேட்­டர் முத­லாளி உமா­பதி, ‘தோபார் ராஜா’ என்று ஆரம்­பித்து வச­னம் பேசும் அழகு ரசிக்­கப்­பட்­டது. பைனான்­ஸி­ய­ராக இருந்த மணி­ரத்­னத்­தின் அண்­ணன் ஜி.வெங்­க­டேஸ்­வ­ரன், ‘நாய­கன்’ வெற்­றிக்­குப்­பின் தயா­ரித்த முதல் படம் ‘அக்னி நட்­சத்­தி­ரம்’.

 ‘ரோஜா பூ நாடி வந்­தது’, ‘நின்­னுக்­கோரி வர­னும்’, ‘ராஜாதி ராஜா’ போன்ற பாடல்­கள் அந்­தக் காலத்து ஃபேண்­டசி வகை என்­றால், ‘வா வா அன்பே அன்பே’, ‘தூங்­காத விழி­கள்’ போன்­றவை மெல­டி­யில் புது ரகம்.

நடிக நடி­கை­யர்:  பிரபு, கார்த்­திக், அமலா, நிரோஷா,   வி.கே.ராம­சாமி, ஜன­க­ராஜ், விஜ­ய­கு­மார்,  ஜெய­சித்ரா, சுமத்ரா.  பாடல்­கள் : வாலி இசை : இளை­ய­ராஜா இயக்­கம் : மணி­ரத்­னம்  ஒளிப்­ப­திவு : பி.சி.ஸ்ரீராம் படத்­தொ­குப்பு : வி.டி.விஜ­யன் தயா­ரிப்பு : ஜி.வெங்­க­டேஸ்­வ­ரன்