ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2017 23:40

சென்னை:

ஈஸ்டர் பண்டிகையை இன்று கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சென்னை சாந்தோம் தேவாயலத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்றிரவு சிறப்பு பிரார்த்தனைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் தேவாலயத்துக்கு வந்திருந்தனர்.