குறிபார்த்து அடிப்போமா கோலிக்குண்டு!

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2017

கோலிக்­குண்டு, தமி­ழக நாட்­டுப்­புற விளை­யாட்­டு­க­ளில் ஒன்று. இந்த விளை­யாட்டை விளை­யாட பள­பள பளிங்கு உரு­ளைக்­குண்­டு­கள் தேவை. இந்த விளை­யாட்டை பல ரக­மாக விளை­யாட முடி­யும். குழிக்­குண்டு, தலைக்­காய், லாக் மற்­றும் பேந்தா என, நான்கு வகை உண்டு. இதில், நாம் முக்­கி­ய­மா­கப் பார்க்க வேண்­டி­யது 'தலைக்­காய்' மற்­றும் 'பேந்தா'.

தலைக்­காய்

இந்த விளை­யாட்டு, இன்று மால்­க­ளில் விளை­யா­டப்­ப­டும் 'ஸ்னோ பவு­லிங்' ஆட்­டத்­துக்கு ஒப்­பா­னது. வரி­சை­யாக கோலி­களை அடுக்­கி­வைத்து அதன் தலை­வ­னாக ஒரு கோலிக்­குண்­டைத் தேர்­வு­செய்ய வேண்­டும். அந்த தலை­வனை குறி­பார்த்து அடித்­தால், அத்­தனை கோலிக்­குண்­டு­க­ளும் நமக்­குச் சொந்­தம். அது அல்­லாது மற்ற குண்­டு­களை அடித்­தால், அதற்கு வல­து­பு­றம் இருக்­கும் கோலிக்­குண்­டு­களை நீங்­கள் அள்­ளிக் கொள்­ள­லாம். கோலிக்­குண்­டு­களை ஜெயித்­து­விட்டு, அதை பாக்­கெட் நிறைய போட்­டுக்­கொண்டு சிறு­வர்­கள், இந்த விளை­யாட்டை விளை­யா­டித்­தான் ஜெயிப்­பார்­கள்.

பேந்தா

ஒரு செவ்­வ­கத்தை வரைந்து, அதை இரண்­டா­கப் பிரித்­துக்­கொள்ள வேண்­டும். அதி­லி­ருந்து ஒரு பத்து அடி தாண்டி, எல்­லைக்­கோடு போட்­டுக்­கொள்ள வேண்­டும். அங்­கி­ருந்து குண்­டு­களை உருட்­டி­விட வேண்­டும். யாரு­டைய கோலிக் குண்டு அந்­தச் சது­ரத்­திற்கு அரு­கில் இருக்­கி­றதோ அவர் ஜெயித்­த­வர். மற்­ற­வர்­க­ளு­டைய குண்­டு­களை எல்­லாம் அந்த சது­ரத்­திற்­குள் வைத்­து­விட வேண்­டும். ஜெயித்­த­வர் தன் குண்டை பயன்­ப­டுத்தி, சது­ரத்­திற்­குள் இருக்­கும் குண்­டு­களை சது­ரத்­திற்கு வெளியே வரும்­படி அடிப்­பார். குண்டு வெளியே வந்­த­தும் ஜெயித்­த­வர், சொல்­கிற நபர்­கள் மட்­டும் குண்டை எடுத்­துக்­கொள்ள வேண்­டும். கடை­சி­யாக ஒருத்­தர் மாட்­டிக்­கொள்­வார். அவ­ரு­டைய குண்டை மற்­ற­வர்­கள் மாற்றி மாற்­றி­ய­டித்து, அந்­தச் சது­ரத்­தி­லி­ருந்து விரட்டி விடு­வார்­கள். யாரா­வது குறி­வைத்து அடிக்­கும்­போது குண்டை அடிக்­கா­விட்­டால், அவர் அவுட்­டாகி விடு­வார். தோல்­வி­யுற்­ற­வர், கடை­சி­யில் முட்­டிக்­கை­யால் அந்­தக் குண்டை சது­ரம் வரைக்­கும் தள்­ளிச் செல்ல வேண்­டும்.

குழிக்­குண்டு

இதில், குண்டு தங்­கும் ஆழத்­துக்கு குழி அமைத்­துக்­கொள்ள வேண்­டும். சுமார் ஒரு மீட்­டர் இடை­வெளி விட்டு, நேர்­கோட்­டில் மூன்று குழி­கள் போட வேண்­டும். விளை­யா­டு­ப­வர்­கள், எத்­தனை நபர்­களோ, வரி­சை­யாக ஒவ்­வொரு குழியை நோக்கி கோலி­களை உருட்டி, அதற்­குள் தள்ள வேண்­டும். இப்­ப­டியே வரி­சை­யாக அடுத்­த­டுத்த குழிக்­குச் செல்ல வேண்­டும். யார் குழி­க­ளுக்­குள் குண்­டு­களை உருட்டி, முத­லில் வெளி­யே­று­கி­றாரோ அவரே வெற்­றி­பெற்­ற­வர்.

குண்டை அடிக்­கும் முறை

கட்­டை-­­­­வி­ரலை நிலத்­தில் ஊன்றி, நடு­வி­ரல் அல்­லது ஆட்­காட்டி விர­லின் விசை­யால் கோலிக்­குண்டை அடிக்க வேண்­டும். இதை படத்­தில் காண­வும்.

கோலிக்­குண்டு விளையா டும்­போது பாடும் பாட்டு

குண்டு குண்டு

கோலிக்­குண்டு,

கட­லில் உண்டு

குண்டு நண்டு

எதிர்ப்­ப­வர் கோலியை

உடைக்­கும் குண்டு

எனக்­கும் உனக்­கும்

பந்­த­யம் உண்டு

தோற்­றால் சொல்­வேன்

'போடா மண்டு'.