தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் எவ்வளவு? மத்திய அரசு நாளை முடிவு

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2017 21:37

புதுடில்லி,

பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக எவ்வளவு வழங்குவது என்பதை நாளை மத்திய அரசு முடிவு செய்ய உள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துள்ளது.  தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் வறட்சி நிலவரங்களை பார்வையிட கடந்த ஜனவரி மாதம் 22 முதல் 25 வரை நான்கு நாட்கள் மத்திய அரசினால் அமைக்கப்பட்ட குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாய நிலங்களைப் பார்வையிட்டது.


பின்னர் புதுடில்லியில் மத்திய உள்துறை அமைசக்கத்திடம் அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

தற்போது தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2096.80 கோடி தர மத்திய குழு பரிந்துரை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறையின் துணைக்குழு தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.1748.20 கோடி வழங்கவே பரிந்துரை செய்துள்ளது

இந்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையையும் மத்திய உள்துறை பரிசீலனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உளதுறை அமைச்சகத்தின் பரிசீலனைக் கூட்டத்திற்கு மத்திய உளதுறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமை வகிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.