கோழிக்கோட்டில் கார் மீது டிப்பர் லாரி மோதி 2 பேர் பலி

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 22:54

கோழிக்கோடு:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பாலூர் பகுதியில் கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் 7 வயது சிறுமி நதுரின் மற்றும் 8 வயது சிறுவன் ஆகியோர் உயிழந்தனர். படுகாயமடைந்த டிப்பர் லாரி ஒட்டுனர் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மற்றவர்களை கொயிலாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.