சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 287 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2017

‘பய­ணங்­கள் முடி­வ­தில்லை’

மதர்­லேண்ட் பிக்­சர்ஸ் சார்­பில் தயா­ரிக்­கப்­பட்டு 1982ம் ஆண்டு வெளி­வந்து மகத்­தான வெற்றி பெற்று வசூலை வாரிக்­கு­வித்த படம் ‘பய­ணங்­கள் முடி­வ­தில்லை’. ஆர். சுந்­தர்­ரா­ஜன் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மான இந்த படம் கதா­நா­ய­க­னாக நடித்த மோகன், கதா­நா­ய­கி­யாக நடித்த பூர்­ணிமா ஜெய­ராம் ஆகி­யோ­ருக்­கும் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது.

கதா­நா­யகி ராதா சென்­னை­யில் உள்ள தன் தோழி வீட்­டில் விருந்­தா­ளி­யா­கத் தங்­கி­யி­ருக்­கி­றாள். பக்­கத்து வீட்­டில் வசித்து வரும் இளை­ஞன் ரவி நன்­றா­கப் பாடக்­கூ­டி­ய­வன். பிர­பல பாட­க­னாக வேண்­டும் என்­ப­தற்­காக கடு­மை­யாக முயற்­சிக்­கி­றான்.

ராதா எழு­திய கவிதை ஒன்று காற்­றில் பறந்து வந்து ரவிக்கு அரு­கில் விழு­கி­றது. அதை எடுத்­துப் பார்க்­கும் ரவி, அதில் உள்ள கவி­தை­யைப் பார்த்து அதற்கு மெட்­ட­மைத்து பாடு­கி­றான்.

இந்த பாட­லைக் கேட்­கும் ராதா, ரவி­யின் இசைத்­தி­ற­மை­யில் மனதை பறி­கொ­டுக்­கி­றாள். ரவி­யின் மீது புகழ் வெளிச்­சம் விழ வேண்­டும் என்ற எண்­ணத்­தில் தனது சகோ­த­ர­னி­டம் சொல்லி ரவிக்கு கோயில் நிகழ்ச்சி ஒன்­றில் இசைக்­கச்­சேரி செய்ய வாய்ப்பு வாங்­கித் தரு­கி­றாள்.

மேலும், தொலைக்­காட்­சி­யி­லும் ரவி பாடு­வ­தற்கு வாய்ப்பு வாங்­கித் தரு­கி­றாள். சிறிது சிறி­தாக ரவி­யின் புகழ் பர­வத் தொடங்­கு­கி­றது. ரவியை மணந்து கொள்ள விரும்­பு­கி­றாள் ராதா. ராதா­வின் அப்­பா­வும் திரு­ம­ணத்­துக்கு சம்­ம­தித்து அதற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­கி­றார். ஆனால், ரவி ராதாவை மணம் செய்து கொள்ள மறுக்­கி­றான்.

இத­னால் கோப­ம­டை­யும் ராதா­வின் அப்பா, தன் சகோ­த­ரி­யின் மகன் டாக்­டர் மோக­னுக்கு தன் மகளை திரு­ம­ணம் செய்து வைக்க முடிவு செய்­கி­றார். இந்த நிலை­யில் தன்னை மணக்­க­வி­ருக்­கும் டாக்­டர் மோகன் மூலம், ஒரு அதிர்ச்­சி­க­ர­மான உண்மை ராதா­வுக்கு தெரி­ய­வ­ரு­கி­றது.

இசை உல­கில் ரவி­யின் புகழ் வளர்ந்து கொண்­டி­ருந்த அதே வேளை­யில், அவன் உட­லில் கேன்­சர் நோயும் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. ராதாவை ரவி உயி­ருக்­கு­யி­ராக நேசித்­தா­லும் மர­ணத்­தின் வாச­லில் நிற்­கும் தன்­னால் அவ­ளது வாழ்க்கை பாழா­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே அவளை திரு­ம­ணம் செய்து கொள்­வ­தைத் தவிர்த்­தி­ருக்­கி­றான் ரவி.

இந்த உண்மை தெரி­ய­வந்­த­தும் ராதா விஷம் குடித்து தற்­கொலை செய்து கொள்­கி­றாள்.

கேன்­சர் கார­ண­மாக ரவி­யும் இறந்து விடு­கி­றான். வாழ்க்­கை­யில் இணை­ய­மு­டி­யாத இந்த காத­லர்­கள் மர­ணத்­தால் இணைந்து தங்­கள் காதலை வாழ வைக்­கி­றார்­கள்.

இப்­ப­டத்­தில் மோகன், எஸ்.வி. சேகர், கவுண்­ட­மணி, பூர்­ணம் விஸ்­வ­நா­தன், பூர்­ணிமா ஜெய­ராம் உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்­தார்­கள்.

கதை : கோவைத்­தம்பி, பாடல்­கள் : வைர­முத்து, முத்­து­லிங்­கம், கங்கை அம­ரன், இசை : இளை­ய­ராஜா. திரைக்­கதை, வச­னம், இயக்­கம் : ஆர்.சுந்­தர்­ரா­ஜன்.