2 நாள் ‘அனல்’ தொடரும்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 09:58


சென்னை:

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு:  

தமிழகத்தில் வெயில் தாக்கம் பரவலாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக கரூரில் 105 டிகிரி வெப்பம் பதிவானது. மதுரை, திருச்சி, சேலத்தில் 101 டிகிரி, நெல்லையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடலோர பகுதியில் அனல்காற்று தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் 4 டிகிரியும், வட கடலோர மாவட்டங்களில் 2 டிகிரியும் இயல்பைவிட வெப்பம் கூடுதலாக தகிக்கும்.   இவ்வாறு வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.