ஸ்ரீநகர் எம்.பி. தொகுதியில் பரூக் அப்துல்லா மனுதாக்கல்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 09:09


ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு ஏப்ரல் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட  முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நசீர் அகமது கான் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  ஸ்ரீநகர் தேர்தல் அதிகாரி பரூக் அகமது லோனே முன் இவர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த தாரிக் ஹமீது என்பவர் காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டி கடந்த ஆண்டு தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதனால் இப்போது அந்த  தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதே போன்று தெற்கு காஷ்மீர் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங். சார்பில் ஜி.ஏ.மிர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி முப்தி தஸ்தக் ஹூசைன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.