ஜாமீனில் வெளியில் வந்த சேகர் ரெட்டி மீண்டும் கைது

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 07:16

சென்னை:

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சேகர் ரெட்டி மற்றும் அவர் கூட்டாளிகள் 2 பேரை மீண்டும் அமலாக்கத்துறை கைது செய்தது.  

சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்த வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவர் கூட்டாளிகள் பிரேம்குமார், சீனிவாசலு, ரத்னம், ராமசந்திரன் ஆகியோரை கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இதற்கிடையே சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய 3 பேருக்கும் கடந்த 17ம் தேதி சிபிஐ சிறப்பு கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இந்நிலையில் திடீரென சேகர் ரெட்டியை சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரவழைத்து அமலாக்கத்துறை நேற்று காலை முதல் விசாரணை நடத்தியது. 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரை அமலாக்கத்துறையினர் நேற்று மீண்டும் கைது செய்தனர்.