டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தில் முர்ரே

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 07:07

பாரீஸ்: 

ஏடிபி டென்னிஸ் தர வரிசைப் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில், இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 12ஆயிரத்து 005 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2ம் இடத்தில் 8 ஆயிரத்து 915 புள்ளிகளுடன் ஜோகோவிச்சும், 5 ஆயிரத்து 705 புள்ளிகளுடன் வாவ்ரிங்கா 3ம் இடத்திலும் உள்ளனர். ஜப்பானின் கெய் நிஷிகோரி 4 ஆயிரத்து 730 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், கனடாவின் மைலோஸ் ரோனிக் 4 ஆயிரத்து 480 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் பெடரர் 4 ஆயிரத்து 505 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் நடால் 4 ஆயிரத்து 415 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், ஆஸ்திரியாவின் டொமினிக் 3 ஆயிரத்து 465 புள்ளிகளுடன் 8ம் இடத்திலும் உள்ளனர்.