பிரம்மா வழிபட்ட பிரம்மதேசம் கைலாசநாதர்!

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017
ஆதி கைலா­யங்­களில் முதன்­மை­யா­ன­தா­கவும், தென் மாவட்ட நவக்­கிரக த­லங்­களில் சூரிய த­ல­மா­கவும், பஞ்சபீட த­­லங்­களில் கூர்ம பீட­மா­கவும் விளங்­கு­கி­றது நெல்லை மாவட்டம் அம்­பையை அடுத்­துள்ள பிரம்­ம­தேசம் கைலா­ச­நாதர் சுவாமி கோயில். பிரம்­மா­வும், அவ­ரது பேரன் முனி­­வ­ரான உரோ­மச மக­ரி­ஷியும் கைலா­ச­நா­த­ரையும், பிர­­ஹந் ­நா­ய­கி­யையும் வழி­பட்­டுள்­ளனர்.

ஊர் சிறப்­பு!

இயற்கை வள­ங்­­க­ளோடு கூடிய அழ­கிய கிராமம், பிரம்­ம­தேசம். பிரம்­மாவின் பேரன், சுயம்­பு­லிங்­க­மான கைலா­ச­நா­தரை பூஜித்­ததால் ‘பிரம்­ம­தேசம்’ என்ற பெயர் வழங்­கப்­பட்­ட­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. இவ்வூர் அரு­கே­யுள்ள திரு­வா­லி­நாதர் சுவாமி கோயிலை கட்­டிய மன்னன் ராஜ­ராஜ சோழன், இவ்­வூரை நான்­மறை வேதம் ஓதிய அந்­த­ணர்­க­ளுக்கு தான­மாக வழங்­கி­யதால், ராஜ­ராஜ சதுர்­வேதி மங்­கலம் அல்­லது ‘பிரம்­ம­தே­சம்’ என்­பது மருவி பிரம்­ம­தேசம் என அழைக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­ற­து. காஞ்சி காம­கோடி மடத்தின் 2வது பட்­­டத்தை அலங்­கரித்து வந்த ஸ்ரீ ஸர்வக்­ஞா­த்­மேந்­திர சரஸ்­வதி சுவா­மி­கள் பிரம்­ம­தே­சத்தில் அவ­த­ரித்­தவர். அவ­ரது நினை­வாக ரிக் ­வேத பாட­சாலை செயல்­பட்டு வரு­கி­ற­து.

கோயில் சிறப்­பு!

சிவ­பெ­ருமான், சிவ­சைல மலையில் வாழ்ந்து வந்த அத்ரி முனி­வ­ரிடம், தான் சிவ­­சைலம், திரு­வா­லீஸ்­வரம் மற்றும் இவ்வூர் கைலா­ச­நாதர் லிங்­கங்­களில் சுயம்­பு­வாக அருள்­பா­லித்து வரு­வ­தாக கூறி­ய­தாக பிர­மாண்ட புரா­ணத்தில் கூறப்­பட்­டுள்­ள­து.

கோயிலின் முன்­ப­கு­தியில் தெப்­பக்­குளம் அமைந்­துள்­ளது. கோபு­ரத்­திற்கு வெளியி­லேயே தெற்கு பகு­தியில் விநா­ய­கரும், வடக்­குப்­ப­கு­தியில் முரு­கப்­பெ­ரு­மானும் அருள்­பா­லிக்­கின்­ற­னர்.

கோயிலின் முகப்பு பகு­தியில் ராஜ­கோ­பு­ரம் 7 அடுக்­கு­­களுடன் கம்­பீ­ர­மாக உள்­ளது. தெற்கு பகுதியில் நெல்­குத்­து­ப்­பி­றை என்ற மிகப்­­பெரிய கல் மண்­டபம் உள்­ளது. கோயிலின் தின­சரி நை­வேத்­யங்­க­ளுக்கும், விழாக்­கா­லங்­க­ளிலும், பஞ்சம் ஏற்­பட்ட காலங்­க­ளிலும், போர்க்காலங்­க­ளிலும் இவ்வூர் மக்களுக்கு உண­வ­ளிக்க தேவைப்­படும் அரிசி நெல்குத்­துப்­பி­றை­யி­லேயே கைக்­குத்­த­லாக குத்­தப்­பட்­­ட­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­ற­ன.

வடக்­குப்­ப­­கு­தியில் வசந்த மண்­ட­ப­மும், நந்­த­வ­­னமும் உள்­ளன. வசந்த மண்­ட­பத்தில் கோடை காலங்­க­ளில் வசந்த உற்­சவம் சிறப்­பாக நடத்­தப்­பட்­டுள்­ளது. கோயிலில் குடவரை வாசல் கதவு, மிகவும் பாது­காப்­புடன் செய்­யப்­பட்­டுள்­ளது. அன்­னியர் படை­யெ­டுப்பு காலங்­களில் இவ்வூர் மக்கள் கோயி­லுக்குள் அடைக்­கலம் புகு­ந்து கதவு பூட்­டி­யி­ருக்கும் போது, யானை படை­களை வைத்து வாசல் கதவை முட்டி திறக்கச் செய்­­வார்­களாம். அப்­போது கதவில் மிக நெருக்­க­மாக அமைந்­துள்ள குமிழ் ஆணிகள் யானையின் நெற்­றியை கோர­ப்­ப­டுத்தி விடும் என்­பதால் யானை­க­ளாலும் தகர்க்க முடியா­த­படி கதவை பாது­காப்பாக அமைத்­துள்­ளனர். கோயிலின் சுற்­று­ மதில் சுவர்கள் மிக உய­ர­மா­கவும், அக­லமா­கவும் அமைந்­துள்­ள­ன.

மற்ற சுவரின் உட்­புறம் சுமார் 2 அடி அக­ல­முள்ள ஆளோடி சுவர் என சொல்­லப்­படும் ஒரு தட்­டு மதிற்­சு­வ­ருக்கு 5 அடி தாழ்­வாக உள்­ளது. இந்த ஆளோடி சுவற்றில் நின்று கொண்டு எதி­ரிகள் வரு­வதை படைவீரர்கள் கண்­கா­ணிப்­பார்­களாம். கோபு­ரத்தின் கடைசி தளத்­தில் நான்கு புறமும் பார்க்கும்படி பெரிய வாசல்கள் உள்­ளன. படையெ­டுப்பு காலங்­களில் எதி­ரிகளின் நட­மாட்­டத்தை பல மைல் தூரம் கண்­கா­ணிக்க இயலும். மக்­களின் போர்க்­கால காப்­ப­க­மா­கவும் இருந்­தது என்­பது தெரி­கி­ற­து.குடவரை வாயிலை தாண்டி தென்­பு­றத்தில் சம­யக்­கு­ரவர் நால்­வரில், தேவாரம் பாடிய மூவரின் சன்னிதிகள் அமைந்­துள்­ளன. அதை­ தாண்டி மேற்கே சித்­தி­வி­நா­யகர் அருள்­பா­லிக்­கிறார். வட­பு­றத்தில் மாவட்­டத்­தி­லேயே பெரிய கல்லில் செதுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய நந்­தி­கேஸ்­வரர் அருள்­பா­லிக்­கி­றார். வட­புறம் வள்ளி – தெய்­­வா­னை­யுடன் கூடிய முருகன் சன்­னிதி, உட்­­பி­ர­ாகா­ரத்­திற்கு செல்லும் வாசலின் இரு­பு­றங்களிலும் துவார பால­கர்கள் உள்­ளனர். மத்­தியில் அதி­கா­ர நந்தி, இரு பக்­கங்களும், சந்­தி­ர­னுக்கும் சன்­னி­திகள் உள்­ளன. தென்­புறம் ஜூர­தே­வரும், அறுபத்தி மூவரும், பிராம்மி மாகேஸ்­வரி கவு­மாரி, வைஷ்­ண­வி, வாரா­ஹி, இந்­தி­ராணி, சாமுண்டி ஆகிய சப்­த­மா­தர்­க­ளும், முத்­தி­ரை­யுடன் கூடிய ஆத்ம வியாக்­கிய தட்­ச­ணா­மூர்­த்­தியும், மகி­ஷா­சுரமர்த்­தி­­னியும், பால­க­ண­ப­தியும் எழுந்­த­ரு­ளி­யுள்­ளனர். வடக்­கு பிர­ாகா­ரத்தில் பால­மு­ருகன், கஜ­லட்­சுமி, சண்­டி­கேஸ்­வ­ரரும் காட்சி அளிக்­கின்­றனர். ஓம் பிர­­பை­யுடன் ஒரே கல்லில் செதுக்­கப்­பட்ட தாண்­ட­வ­மூர்த்தி தனி­ ச­பை­­யுடன் காட்சி தரு­கிறார். புனு­கு­ ச­பா­பதி என்ற பெயர் கொண்ட நட­ராஜ மூர்த்­தி­யுடன் சிவ­காமி அம்­­மையும், பதஞ்­சலி, வியாக்­கி­ர­பாதர் முனிவரும் உள்ள­னர்.  மகா மண்­ட­பத்­திற்கு முன்­பாக கோயிலை கட்­டிய மன்னர் விஸ்­வ­நாத நாயக்கர், மூல­வரை வணங்கும் கோலத்தில் சிலை உள்­ளது. கரு­வ­றையில் மூலவர் கைலா­ச­நாதர் லிங்க உரு­வத்தில் பிரம்மாண்­ட­மாக அருள்­பா­லிக்­கிறார்.

சுவாமி சன்­னி­தியில் இருந்து அம்மன் சன்­ன­ிதிக்கு செல்லும் வழியில் புராணக் கதைகளை நினை­வூட்­டும் உருவங்கள், சிற்­பங்கள் வடி­வ­மைக்­கப்­பட்­­டுள்­ளன. ஆதி­மூ­ல­ லிங்கம் எனக் கூறப்­படும் பத­ரி­னேஸ்­வரர் எனும் இலந்­தை­ய­டி­­நாதர் சுயம்­பு­லிங்க மூர்த்­தி­­யாக காட்சி அளிக்­கிறார். கோயிலின் தல விருட்­ச­மா­க இல­ந்தை மரம் விளங்­கு­கி­றது. அருகில் மீனாட்­சி சுந்­த­ரேஸ்­வரர் சன்­னிதி அமைந்­துள்­ளது. சோம­வார மண்­ட­பத்தின் தென்­­கோ­டியில் பட்­சா­டனர் சபை மண்­டபம் உள்­ள­து.

சன்­ன­ிதியின் நடு­நா­ய­க­மாக சிவ­­பெ­ருமான், அவ­ர­து பரி­வார தேவ­தை­க­ளான சந்­திரன், சூரியன் உள்­ளிட்ட நவக்­கி­ர­கங்கள், நாரதர், தும்­புரு ரிஷிகள், அக்னி, வாயு, எமன் உள்­ளிட்ட அஷ்­டதிக் பால­கர்கள் முத­லிய சகல தேவ­தைகள் வாக­னங்­க­ளுடன் காட்சி அளிக்­கின்­ற­னர்.

அம்­மன் சன்­னி­திக்குள் வட­பு­றத்தில் சரஸ்­வதி சன்­னிதி தெற்கு முக­மாக அமைந்­துள்­ளது. தென்­புறம் வல்­லப கண­பதி அமைந்­துள்ளார். காளி நாலா­யிர அம்­மனின் உற்­சவ மூர்த்­தி­யும், கரு­வ­­றையில் பிர­ஹந் ­நா­யகி அம்­பாளும் காட்சி அளிக்­கின்­றனர். அம்மன் சன்­னி­திக்கு எதிரே ஆருத்ரா மண்­டபம் அழ­கிய சிற்ப கலை­க­ளுடன் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­து.

வெளிப்­பிர­ாகா­ரத்தின் தென்­புறம் விசாலாட்­சி-­ – விஸ்­­வ­நா­த­ருக்கு தனி ­சி­றப்பும், மேற்­புறம் அண்­ணா­ம­லை­­யார்-­ – உண்­ணா­மு­லை­யம்­மை தனி­

சன்­னி­திகளும், பால­மு­ரு­க­­னுக்கு தனி சன்­னிதியும் உள்­ள­ன.

திரு­வி­ழா!

பங்­குனி உத்­திர திரு­விழா, ஐப்­பசி கல்­யாண திரு­விழா, பவித்­ரோத்சவம், வசந்த திரு­விழா, நவ­ராத்­திரி, சிவ­ராத்­திரி, திரு­வா­திரை விழா,  ஆடி­ மாதம்  நாலா­யி­ரத்­த­ம­னுக்கு புஷ்­பாஞ்­சலி ஆகி­யவை  நடக்­கி­ன்றன.

தட்­சண கங்­கையாம், உத்­தி­ர­வா­கி­னியாம் என்­ப­தற்­கேற்ப பிரம்­ம­தே­சத்தில் ஓடிக் கொண்­டி­ருக்கும் கடனா நதி தெற்கே இருந்து வடக்கு நோக்கி கைலா­ச­நா­த­ரை வலம் வரு­வதால் காசிக்கு சென்று தரி­சனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்­பது ஐதீ­­கம்.

பிரம்ம தீர்த்­தம்!

சிவ­பெ­ரு­மானை அவ­ம­திக்கும் வகையில் தட்­சனின் யாகத்தில் கலந்து கொண்ட பிரம்மன், இத்­த­லத்தில் தன் தவற்றை உணர்ந்து சிவ­பெ­ரு­மானை வழி­பட்டு, இங்கு தீர்த்தம் எற்ப­டுத்­தி­யதால், இங்­குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என விளங்­கு­கி­ற­து.

தல விருட்­சம்: இலந்தை மரம், தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், விமானம்: பத்­ம­வி­மானம், ஆகமம்: காமி­காகம்.

கலைநயம், சிற்ப வேலைப்­பா­டு!

கோயில் கூரை போன்ற அமைப்­பை உடைய முகப்பு மண்­டபம் மரக்­­கூ­ரையா, கற்­கூ­ரையா என வியப்­ப­­டையும் வகையில் உள்­ளது. கற்­களில் செதுக்­கப்­பட்ட 20 யாளிகள்தான் திரு­வா­திரை மண்­ட­பத்தின் தூண்கள். மண்­டப முகப்பில் மேற்­கூ­ரையில் இருந்து நிஜ­மான குரங்­குகள் தாவு­வது போல கல்­லில் தத்­ரூ­ப­மாக வடி­வ­மைத்­துள்­ள­னர்.

வாலியும், சுக்­ரீ­வனும் போரிடும் போது, ராமன் மறைந்­தி­ருந்து அம்பு எய்து கொன்றான். இந்த ராமா­யண காட்­சியை விளக்க ராமனை ஒரு தூணிலும், போர் புரியும் வாலி- – சுக்­ரீ­வனை மற்­றொரு தூணிலும் வடி­வ­மைத்­துள்­ளனர். வாலியின் சிலை முன்பு நின்று பார்த்தால் ராமன் தெரி­யாதபடியும், ராமன் சிலை முன்பு நின்று பார்த்தால் சுக்­ரீ­வனும், வாலியின் முதுகு புறமும் தெரியும் வண்ணம் அமைந்­தி­ருப்­பதும் சிற்ப கலை­ஞ­ர்­களின் கற்­பனைத் திறனை காட்­டு­கி­ற­து.

கோயில் வெளிப்­பி­ர­ாகா­ரத்தில் பூக்கள் தளத்­தில் இருந்து பார்த்தால் கோயிலின் இரண்டு ராஜ­கோ­புரங்கள், நடு ராஜ­கோ­புரம், ஏழு விமா­னங்­க­ளை தரி­சிக்க முடி­யும்.

25ல் லட்ச தீபம்!

இக்­கோ­யிலில் இம்மாதம் வரும் 25ம் தேதி சனிப்­பி­ர­தோஷம் சிறப்பு பூஜை­யா­கவும், லட்ச தீப­மா­கவும் நடை­பெற பக்­தர்கள் ஏற்­பாடு செய்து வரு­கின்­ற­னர். அன்று 1008 சிவப்பு இளநீர் அபி­ஷேகம், தாமரை, செண்­பகம், மனோ­ரஞ்­சிதம் மலர்­களால் சிறப்பு பூஜை அலங்­காரம் செய்­யவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­து.

தொடர்­புக்கு: ராஜ்­குமார், அர்ச்­சகர்: 94428- 94094, செயல் அலு­வலர்: 994௧1 -28535.

பஸ்­ ரூட்: நெல்­லை-­ – பா­பநாசம் பஸ்சில்

அம்பாச­முத்­திரம் இறங்கி, மன்னார்கோவில், கடையம் டவுன் பஸ்கள், காக்­க­நல்லூர் செல்லும் மினி­ பஸ்சில் பிரம்­ம­தேசம் செல்­ல­லாம்.