பாரத்தை இலகுவாக்குதல்!

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017

நான் ஒரு முறை தன் கட்டுக்கடங்காத பிள்ளைகளின் குறும்புத்தனத்தினால் மிகவும் கலக்கமடைந்த ஒரு கிறிஸ்தவ பெண்மணியை பற்றி வாசித்தேன். அவள் ஒரு நாள் தன் கணவன் அலுவலகத்தில் இருக்கும்  போது தொலைபேசியில், ‘‘என் சிநேகிதி வீட்டிற்கு வந்திருந்தாள். என் சமையலறையில் ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும்  செய்ய எனக்கு பெலனுண்டு’ என்ற வசனத்தை ஒட்டி வைத்துவிட்டு சென்று விட்டாள்’’ என்று கண்ணீரோடு சொன்னாள். அந்த பெண்மணி அவளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றுதான் அவ்வாறு செய்தாள். ஆனால், அவளது செய்கை இந்த கிறிஸ்தவ பெண்மணியை தான் ஏதோ வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டதாக எண்ண செய்தது.

சில சமயம் வெறுமனே நாம் வேதவசனத்தை எடுத்து சொல்வது பிறருக்கு உபயோகமாக இருக்காது. பிலிப்பியர் 4:13–ல் காணப்படும் வசனம் பவுலின் சொந்த சாட்சியாக இருந்தது. ‘நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்க கற்றுக் கொண்டேன். பட்டினியாயிருக்கவும் பரிபூரணமடையவும் கற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார் (வசனம் 11–12). அவர் மனரம்மியமாயிருக்க காரணம் என்னவென்றால், என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு என்ற அசையாத நம்பிக்கையே (வசனம் 13).

நாமும் பவுலின் முன்மாதிரியை பின்பற்றி வாழ முடியும். கிறிஸ்துவின் பெலத்தினால் வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும். ஆனால், இந்த உண்மையை அதிக மனபாரத்துடன் இருக்கும் மக்களின் மேல் திணிக்கக்கூடாது. நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவும் பிறருடைய துக்கத்தில் பங்குபெறவும் வேண்டும் என்று பவுல் எழுதினார் (கலாத்தியர் 6:2; பிலிப்பியர் 2:4, 4:14).

நம்மெல்லாருக்கும் பாரங்கள்  உண்டு. அதனால் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் வேண்டும்.

– ஜோனி யோடர்