மக்கள் புகட்டிய பாடம்!

பதிவு செய்த நாள் : 18 மார்ச் 2017

ஐந்து மாநில சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்­துள்­ளன. அடுத்த இரு வரு­டங்­க­ளில் நடை­பெற உள்ள லோக்­சபா தேர்­த­லுக்­கான முன்­னோட்­ட­மா­க­வும், இந்த சட்­ட­சபை தேர்­தல்­கள் கரு­தப்­பட்­டது. உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் பா.ஜ., மூன்­றில் இரண்டு பங்­கிற்­கும் அதி­க­மான இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இந்த மாநி­லத்­தில் பா.ஜ.,312 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு பிறகு பா.ஜ., ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளது. குடி­ய­ரசு ஆன பிறகு 1951ல் நடை­பெற்ற முதல் தேர்­த­லுக்கு பின், இந்த அளவு ஒரு கட்சி பெரு­வா­ரி­யான தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று இருப்­பது, இதுவே முதன் முறை. அந்த பெரு­மையை பா.ஜ., தட்­டிச் சென்­றுள்­ளது. சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது உ.பி. யில் உள்ள மொத்­தம் 80 லோக்­சபா தொகு­தி­க­ளில் பா.ஜ., 71 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. ஆளும் சமாஜ்­வாதி கட்சி படு­தோல்வி அடைந்­துள்­ளது. இத­னு­டன் கூட்­டணி அமைத்த காங்­கி­ரஸ் வர­லாறு காணாத அள­விற்கு தோல்வி அடைந்­துள்­ளது.

ஐந்து மாநில சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்­துள்­ளன. அடுத்த இரு வரு­டங்­க­ளில் நடை­பெற உள்ள லோக்­சபா தேர்­த­லுக்­கான முன்­னோட்­ட­மா­க­வும், இந்த சட்­ட­சபை தேர்­தல்­கள் கரு­தப்­பட்­டது. உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் பா.ஜ., மூன்­றில் இரண்டு பங்­கிற்­கும் அதி­க­மான இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இந்த மாநி­லத்­தில் பா.ஜ.,312 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு பிறகு பா.ஜ., ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளது.

குடி­ய­ரசு ஆன பிறகு 1951ல் நடை­பெற்ற முதல் தேர்­த­லுக்கு பின், இந்த அளவு ஒரு கட்சி பெரு­வா­ரி­யான தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று இருப்­பது, இதுவே முதன் முறை. அந்த பெரு­மையை பா.ஜ., தட்­டிச் சென்­றுள்­ளது. சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது உ.பி. யில் உள்ள மொத்­தம் 80 லோக்­சபா தொகு­தி­க­ளில் பா.ஜ., 71 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. ஆளும் சமாஜ்­வாதி கட்சி படு­தோல்வி அடைந்­துள்­ளது. இத­னு­டன் கூட்­டணி அமைத்த காங்­கி­ரஸ் வர­லாறு காணாத அள­விற்கு தோல்வி அடைந்­துள்­ளது.

 பஞ்­சாப் மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றுள்­ளது. மூன்­றில் இரண்டு பங்­குக்கு ஒரு இடம் குறை­வாக காங்­கி­ரஸ் 77 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இந்த மாநி­லத்­தில் சிரோன்­மணி அகா­லி­த­ளம், பா.ஜ,, கூட்­டணி ஆட்சி நடை­பெற்­றது. சிரோன்­மணி அகா­லி­த­ளம் 15 தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. இந்த கட்­சிக்கு இது வரை இல்­லாத அளவு தோல்வி என­லாம். பார­திய ஜனதா 3 தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. ஆட்­சியை பிடித்தே தீரு­வோம் என்று சவால் விட்ட ஆம் ஆத்மி கட்சி 20 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று புது கணக்கை துவக்­கி­யுள்­ளது. பஞ்­சாப் மாநில முதல்­வ­ராக காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த கேப்­டன் அமீந்­தர் சிங் பத­வி­யேற்­றுள்­ளார்.

உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் ஆட்­சியை இழந்­துள்­ளது. பா.ஜ,,57 தொகு­தி­க­ளில் வெற்றி வெற்­றுள்­ளது. இது அறுதி பெரும்­பான்­மை­யா­கும். ஆட்­சி­யில் இருந்து காங்­கி­ரஸ் 11 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது.  

கோவா மாநி­லத்­தில் ஆட்­சி­யில் இருந்த பா.ஜ.,வுக்­ககோ, எதிர்­கட்­சி­யான காங்­கி­ரஸ் கட்­சிக்கோ தனித்து ஆட்சி அமைக்­கும் அள­விற்கு வெற்றி வாய்ப்பு கிடைக்­க­வில்லை. பா.ஜ.,13 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. காங்­கி­ரஸ் 17 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. தேசி­ய­வாத காங்­கி­ரஸ் ஒரு தொகு­தி­யி­லும், மாநில கட்­சி­யான மகா­ராஷ்­டி­ர­வாதி கோமந்­தக் கட்சி 3 தொகு­தி­க­ளி­லும், கோவா பார்­வர்ட் கட்சி 3 தொகு­தி­க­ளி­லும், சுயேச்­சை­கள் 3 தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர். கோவா­வில் அதிக இடங்­க­ளைப் பிடித்­துள்ள காங்­கி­ரஸ் கட்­சி­யால் ஆட்சி அமைக்க இய­லா­மல் உள்­ளது.

கோவா மாநில முதல்­வ­ராக இருந்து, பிர­த­மர் மோடி­யின் அழைப்­பின் பேரில் மத்­திய பாது­காப்பு அமைச்­ச­ராக ஆன­வர் மனோ­கர் பரிக்­கர். தற்­போது மீண்­டும் கோவா முதல்­வ­ராக ஆகி­யுள்­ளார். பா.ஜ.,ஆட்சி அமைக்க மகா­ராஷ்­டி­ர­வாதி கோமந்­தக் கட்சி(3), கோவா பார்­வர்ட் கட்சி(3), இரண்டு சுயேச்­சை­கள், ஒரு தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்சி உறுப்­பி­னர் என மொத்­தம் 9 பேரின் ஆத­ர­வு­டன் மனோ­கர் பரிக்­கர் மீண்­டும் முதல்­வ­ராக பதவி ஏற்­றுள்­ளார்.

வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில் ஒன்­றான மணிப்­பூர் மாநி­லத்­தில் ஆட்­சி­யில் இருந்த காங்­கி­ரஸ் 28 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. பார­திய ஜனதா 21 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. திரி­ணா­முல் காங்­கி­ரஸ் ஒரு தொகு­தி­யி­லும், நாகா மக்­கள் முன்­னணி 4 தொகு­தி­க­ளி­லும், ஏ.கே. சங்­மா­வின் நேஷ­னல் பீப்­பிள்ஸ் கட்சி 4 தொகு­தி­க­ளி­லும், சுயேச்சை ஒரு தொகு­தி­யி­லும் வெற்றி வெற்­றுள்­ள­னர். இந்த மாநி­லத்­தி­லும் மற்ற கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் பா.ஜ., ஆட்சி அமைத்­துள்­ளது. முதல்­வ­ராக நாங்­தோம்­பம் பிரேன் சிங் பத­வி­யேற்­றுள்­ளார்.  

ஐந்து மாநி­லங்­க­ளி­லுமே ஆட்­சி­யில் இருந்த கட்­சியை வாக்­கா­ளர்­கள் மீண்­டும் தனித்து ஆட்சி அமைக்­கும் அள­விற்கு வெற்றி வெற வைத்து, ஆட்­சி­யில் அமர்த்­த­வில்லை என்­பதே, இந்த தேர்­தல் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும், தலை­வர்­க­ளுக்­கும் உணர்த்­தும் பாடம். ஜாதி, மதம், இனம் என்ற அர­சி­யல் பண்­டி­தர்­க­ளின் கணக்­கு­க­ளும் பொய்த்­துப் போய்­விட்­டன.

ஆட்­சிக்கு வரும் முன், குறிப்­பாக தேர்­தல் காலங்­க­ளில் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி விட்டு, பிறகு மக்­கள் மறந்து விடு­வார்­கள் என்று தப்­புக் கணக்கு போட்­டால், சரி­யான பாடத்தை மக்­கள் கற்­பித்து விடு­வார்­கள் என்­ப­தை­யும் இந்த தேர்­தல் முடி­வு­கள் உணர்த்­து­கின்­றன. அத்­து­டன் உட்­கட்சி சண்டை, குடும்ப நலன், அதி­கார ஆண­வம் என்­ப­ன­வற்­றை­யும் மக்­கள் பொழுது போக்­காக ரசிக்­கா­மல், உன்­னிப்­பாக கவ­னித்து பொறுமை காத்து சந்­தர்ப்­பம் கிடைக்­கும் போது பாடம் புகட்­டு­வார்­கள் என்­ப­தை­யும், இந்த 5 மாநில தேர்­தல் முடி­வு­கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.