சூரத்தில் 28.68 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2017 02:20

சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் ராந்தர் நகர பகுதியில் 28.68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை இன்று போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராந்தர் நகர பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது வழியில் நிறுத்தி இருந்த 2 கார்களில் பதுக்கி வைத்திருந்த 28.68 லட்சம் மதிப்புள்ள பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் 1,125 ம், 500 நோட்டு 3,486 ம் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்த பழைய ரூபாய் நோட்டுகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அதிகாரி கூறினார்.