நம்பர்–3 கோலிக்கு ராசியா...!

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 09:00

துபாய்:

ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த வீரர்கள் தர வரிசைப் பட்டியலில் இந்தியக் கேப்டன் விராட் கோலி, 847 புள்ளிகளுடன் தொடர்ந்து 3வது இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறார். முதல் இடத்தில் ஆஸி., கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடனும், 2ம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோரூட் 848 புள்ளிகளுடனும் நீடிக்கின்றனர். 4ம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், 5ம் இடத்தில் டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர். மற்றொரு இந்திய வீரான ரஹானே 719 புள்ளிகளுடன் 15ம் இடத்தில் உள்ளார்.