இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் 2ம் சுற்றில் சானியா ஜோடி

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 08:59


இந்தியன் வெல்ஸ்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன்வெல்ஸ் பகுதியில் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்தப் போட்டியில் சர்வதேச வீரர்கள் பலர் கொண்டுள்ளனர். ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டங்களும் தொடங்கின. பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோவா ஜோடி, ஜெர்மன் நாட்டின் ஜூலியா கோர்ஜியஸ், லாத்வியாவைச் சேர்ந்த ஜெலீனா ஓஸ்டாபென்கோவை எதிர்த்து விளையாடியது. 75 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் 6-3 மற்றும் 6--4 என்ற செட்களில் சானியா ஜோடி வெற்றிபெற்றது. இதையடுத்து, 2ம் சுற்றில் சானியா, ஸ்டிரைக்கோவா ஜோடி இத்தாலியின் சாரா எர்னாய், பாப்லோ க்யூவாஸ் ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.