ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பத்மஜா தேவி நியமனம்

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 01:24

சென்னை:

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனர் பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

உதவி தேர்தல் அலுவலராக தாசில்தார்கள் சேகர், மதன்பிரபு ஆகியோரும், வாக்காளர் பதிவு அலுவலராக தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த கட்சிகள் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் சென்னை பெருநகர ஆணையர் கார்த்திகேயன்  கோரிக்கை விடுத்துள்ளார்.