ஐந்து மாநில தேர்தல்: பா.ஜ.க. உயர்மட்டக் குழு நாளை கூடுகிறது

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 00:27

புதுடில்லி,

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி, பா.ஜ.க. உயர்மட்டக்குழு நாளை-சனிக்கிழமை- கூடுகிறது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதில் உத்தரப்பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் சூழலில், முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் பா.ஜ.க. உயர்மட்டக்குழு கட்சித்தலைவர் அமித் ஷா தலைமையில் நாளை கூடுகிறது.

பா.ஜ.க. உயர்மட்டக்குழுவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்யா நாயுடு, ஆனந்த் குமார், தவார்சந்த் கேலாட், ஜே.பி. நட்டா உள்பட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் முதல்வர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.