லஞ்சம் கொடுப்பதில் இந்தியர்கள் முதலிடம்

பதிவு செய்த நாள் : 08 மார்ச் 2017 02:23

பெர்லின்:

ஆசியப் பசிபிக் நாடுகளில் சர்வதேச ஊழல் எதிர்ப்புக்குழு நடத்திய ஆய்வில் அரசு அலுவலகங்களில் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதில் இந்தியர்கள் முதல் இடத்தில் இருப்பது தெரியவந்தது.
69 சதவீதம் இந்தியர்கள் தாங்கள் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டனர் இதை தொடர்ந்து வியட்நாமில் 65 சதவீதம் பேரும், பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இது 26 சதவீதமாக உள்ளது. தென் கொரியாவில் 3 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். மிகக் குறைவாக ஜப்பானில் 0.2 சதவீதம் பேரே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

அதேசமயம், சீனாவில் லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விடவும் 73 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இது 41 சதவீதம் உயர்ந்துள்ளது.  

ஆசிய - பசிபிக் மண்டலத்தைச் சேர்ந்த 16 நாடுகளில் 20,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.