மகாமகம் கொண்டாடுவது எப்போது?

பதிவு செய்த நாள் : 07 மார்ச் 2017

குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் வரும் மாசி மாதத்து மகம் நட்சத்திரமே, மகாமக தினமாகக் கொண்டாடப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ‘குரு பிரவேசம்’ நிகழும். இந்த நாளில் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும். குரு பெயர்ச்சி ஆவது சில சமயங்களில் முன்னதாக வந்தாலும், விதிவிலக்காக குரு சிம்மத்தில் இருப்பதாக கருதி விழா நடப்பதும் உண்டு. 1945ம் ஆண்டில் மகாமக விழா இம்முறையிலேயே கொண்டாடப்பட்டது.

66 கோடி தீர்த்தங்கள்!

சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை இன்னும் புண்ணிய தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால் மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும்  66 கோடி தீர்த்தங்களும், மகாமக குளத்தில் நீராட வருகின்றன.  எனவே இந்த நாளில் இங்கு நீராடினால் இதுவரை செய்த எல்லா பாவங்களுமே தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.