தோவாளையில் தரம் குறைந்த பால் விற்பனை 140 லி. பாலை அதிகாரிகள் அழித்தனர்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2017 07:47

ஆரல்வாய்மொழி:தோவாளையில் தரம் குறைந்த பாலை  அதிகாரிகள்  பொது மக்கள் முன்னிலையில்   தரையில்  ஊற்றி அழித்தனர். 

தோவாளையில் உள்ள பால் பண்ணை, தெருகளில் தரம் குறைந்த பால் குறிப்பாக 15 டிகிரி அளவில்  விற்பனை செய்யபடுவதாக பொதுமக்கள் மத்தியில்  புகார் எழுந்தது.  இதை கண்டித்து கடந்த சில மாதங்களுக்கு  முன் துணைத்தலைவர் மற்றும்  இயக்குனர்கள் ராஜினாமா செய்தனர்.  இந்நிலையில்  பால் பண்ணைக்கு  40 லிட்டர் பாலை  தனியார்   ஒருவர் கெண்டு வர சோதனை செய்ய போது  15 டிகிரி இருந்தது.  இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்   உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்  ஆரல்வாய்மொழி  போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கும் வந்த  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஜெய்குமார், சிதம்பரதாணு  மற்றும் போலீசார் வந்தனர்.  தரம் குறைந்த பாலை பரிசோதித்து பார்த்ததில் 15 டிகிரியாக இருந்ததால்  40 லிட்டர் பாலையும் கைப்பற்றி  தரையில் ஊற்றி அழித்து எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில்  அந்த வழியாக தெருகளில் விற்பனை செய்ய வந்த  தரம் குறைந்த பாலையும் கைப்பற்றி அதிகாரிகள்  அழித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.