பிறந்த நாள் பலன்கள் (7.1.2016 முதல் 13.1.2015 வரை)

பதிவு செய்த நாள்

08
ஜனவரி 2016
00:03

1,10,19,28  A, I, J, Q, Y

வாக்குபலம் புத்திசாதுார்யம் மேன்மை தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் இருக்கும். கல்வியாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணியில் சிறப்பு கூடும்.

2,11,20,29  B, K, R 

பணவரவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழிலில் அனுகூலமான சூழ்நிலை இருக்கும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத பராமரிப்பு செலவுகள் வரும். கல்வியாளர்களுக்கு கவனச்சிதறல் தடையாகும். வியாபாரத்தில் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை விருத்தியாகும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.

3,12,21,30 C, G, L, S

எதிர்பாராத வரவினங்கள் குடும்பத்தில் சிரமங்களை குறைக்கும். செய்யும் தொழிலில் மேன்மையாக இருக்கும். கடன் சுமை குறையும். எதிர்ப்பு விலகும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு ஏற்றம் தரும். கல்வியாளர்களுக்கு மேன்மையாக இருக்கும். விவசாயிகளுக்கு கடின உழைப்பு இருந்தாலும் கால்நடை விருத்தி லாபம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் சுபகாரிய அனுகூலம் மகிழ்ச்சி தரும்.

4,13,22,31 D, M, T

பக்தி பெருக்கு இறையருள் கிட்டும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி நிலைமை முன்னேற்றமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் லாபம் தரும். கல்வியாளர்களுக்கு விடா முயற்சி நற்பலன் தரும். விவசாயிகளுக்கு பணி முன்னேற்றமாகும் லாபம் தரும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்ப்பு கைகூடும்.

5,14,23 E,H, N, X

அனைவரிடமும் அன்பாக பேசி உங்கள் மதிப்பை உயர்த்துவீர்கள். பொருளாதார சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. பாராட்டு கிட்டும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி திறன் கூடும். வியாபாரிகளுக்கு போட்டிகள் அதிகமாகும். கல்வியாளர்களுக்கு விடாமுயற்சி தேவை. விவசாயிகளுக்கு கடின உழைப்பு இருக்கும். பெண்களுக்கு குடும்ப பொருளாதாரம் உயரும்.

6,15,24 U, V, W 

திட்டமிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். எதிர்பாராத செலவினங்கள் வரும். செய்யும் தொழிலில் லாபம் பெருகும். தொழிலதிபர்களுக்கு தொழிலில் எதிர்பாராத சிரமங்கள் வரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமாக இருக்கும். கல்வியாளர்களுக்கு மேன்மை கிடைக்கும்.விவசாயிகளுக்கு பொருளாதார முன்னேற்றம் வரும். பெண்களுக்கு குடும்பப்பணியில் சிறப்பு கூடும்.

7,16,25  O,  Z

இதுவரை இருந்த சிரமங்கள் விலகி முன்னேற்றம் வரும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். குடும்பத்தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி திறன் கூடும். வியாபாரிகளுக்கு கடின உழைப்பு அலைச்சல் இருக்கும். கல்வியாளர்களுக்கு ஞாபகமறதி தொல்லை தரும். விவசாயிகளுக்கு கால்நடைவிருத்தி லாபம் தரும். பெண்களுக்கு குடும்பத்தில் பணி அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலவும்.

8,17,26 F, P

குடும்பத்தேவைகள் நெருக்கடி தரும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். செய்யும் தொழிலில் மேலதிகாரிகள் அனுசரணை இருக்கும். தொழிலதிபர்களுக்கு வியாபார விருத்தியாகும். கல்வியாளர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் வரும். விவசாயிகளுக்கு நிதி நிலைமை சீராகும். பெண்களுக்கு குடும்பப்பணியில் புதிய பொறுப்புகள் கூடும். இறையருள் கிட்டும்.

9,18,27

இதுவரை இருந்த சிரமங்கள் விலகி முன்னேற்றம் வரும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். தொழிலதிபர்களுக்கு தொழில் விருத்தி புதிய முயற்சி அனுகூலமாகும். வியாபாரிகளுக்கு லாபகரமான சூழ்நிலை இருக்கும். கல்வியாளர்களுக்கு பொழுது போக்கு அம்சம் கவனச்சிதறல் சிரமம் தரும். விவசாயிகளுக்கு பூமி லாபம் தனதான்ய விருத்தி வரும். பெண்களுக்கு குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும்.