'தலைவர்கள் தேடி வருகின்றனர்': விஜயகாந்த் பேச்சு

பதிவு செய்த நாள்

10
ஆகஸ்ட் 2015
10:43
சென்னை: கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. பல தலைவர்களும், நம்மை தேடி வருகின்றனர் என  தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.  

செயற்குழுவில், விஜயகாந்த் பேசியதாவது:கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. பல தலைவர்களும், நம்மை தேடி வருகின்றனர். தே.மு.தி.க., செயல்களுக்கு ஆதரவு தருகின்றனர். இது தொடரும் வகையில், நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.,க்களும், மக்களுடன் நட்பை அதிகரிக்க வேண்டும். அப்போது தான், அவர்கள் பிரச்னை நமக்கு தெரியும்.பல தொகுதிகளில், நமக்கு ஆதரவான ஓட்டுகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து, அவர்கள் பெயரை, மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும், 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும், 'மக்களுக்காக மக்கள் பணி' திட்டம் துவங்கவுள்ளது. மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமாக, இந்த விழாவை கொண்டாட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்ய வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசியதாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.