சினிமாவில் எம்.ஜி.ஆர். – 281 – விஜயபாஸ்கர்

02 நவம்பர் 2016, 10:19 PM

எளிமையான திருமணம்!

அவ­ரது படங்­க­ளில் திரு­ம­ணக் காட்சி ஒரு புரோ­கி­தர் நடத்தி வைப்­பது போல் இருக்­காது. மகாத்மா காந்தி, தந்தை பெரி­யார், அறி­ஞர் அண்ணா போன்ற தலை­வர்­க­ளின் படங்­க­ளின் முன்பு அல்­லது தாய் தந்­தை­யர் படங்­க­ளின் முன்பு (அ) பதிவு அலு­வ­ல­கத்­தில் நாய­கன் நாயகி மாலை மாற்றி கொண்டு பழந்­த­மி­ழர் போல் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தா­கவே காட்­சி­ப­டுத்­தி­யி­ருப்­பார்.

இதன் வாயி­லாக அவர் இரண்டு கொள்­கை­களை வெளிப்­ப­டுத்­தி­னார். ஒன்று பெரி­யார் சொன்ன சீர்­தி­ருத்­த­முறை திரு­ம­ணத்­துக்கு அவர் கொடுத்த வர­வேற்பு, மற்­றொன்று: செல­வில்­லா­மல் எளி­மை­யான முறை­யில் திரு­ம­ணங்­கள் செய்­யப்­பட வேண்­டும் என்­பதை வலு­யு­றுத்­தி­னார். இதற்கு ஏழை­க­ளி­ட­மும் பகுத்­த­றி­வா­ளர்­க­ளி­ட­மும் பெரிய வர­வேற்பு இருந்­தது.

அனைத்து மதத்­த­வர்­க­ளும் ரசிக்­கும் வகை­யில் அவர் படங்­க­ளின் கதை­ய­மைப்­பும், காட்­சி­க­ளும் இருந்­த­தால் எம்.ஜி.ஆர். என்­கிற திரைப்­பட நடி­கர் இந்து, முஸ்­லிம், கிறிஸ்­து­வர், சீக்­கி­யர் என எல்­லாத் தரப்பு மக்­க­ளா­லும் அவர் நேசிக்­கப்­பட்­டார்.

இப்­ப­டிப் புரட்­சித் தலை­வ­ரின் வெற்­றிக்­கான பார்­மு­லாவை சொல்­லிக் கொண்டே இருக்­க­லாம். ஆக, அவ­ருக்கு நிகர் அவ­ரே­தான். அவரை உயர்த்­தி­ய­தும், வாழ வைத்­த­தும் அவர் அன்­னை­யின் அரு­ளும், ஏழை மக்­க­ளின் வாழ்த்­தும், அவ­ரது தன்­னம்­பிக்­கை­யும் தான் என்று சொல்ல வேண்­டும்.

மருந்­தும் நானே நோயும் நானே என்­பது போல எம்.ஜி.ஆர். கால்­மு­றிந்து கிடந்த போதும், துப்­பாக்­கி­யால் சுடப்­பட்­ட­போ­தும், ஆஸ்­துமா, நீரி­ழிவு, கிட்னி பெயி­லி­யர் என மர­ண­வா­சல் வரை கொண்டு சென்ற கண்­டங்­க­ளைத் தாண்டி அவர் வந்­தது தான தர்­மங்­க­ளால் என்­றா­லும் அவ­ரி­டம் இருந்த சில நல்ல பழக்­கங்­க­ளும், படங்­க­ளில் காட்ப்­சி­ப­டுத்­திய தன்­னம்­பிக்­கை­யும், துணிச்­ச­லும் தான் அவர் மூன்­றா­வது பிறவி எடுத்து வரச் செய்­தது என­லாம்.

“என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் எம்.ஜி.அர். அவர்­கள் நோய்­வாய்ப்­பட்டு படுத்த போதும், சிகிச்­சைக்­காக அமெ­ரிக்க மண்­ணில் அடி­யெ­டுத்து வைத்­த­போ­தும், அப்­போது அவ­ருக்­குத் தரப்­பட்ட மருந்­து­க­ளை­விட… மாத்­தி­ரை­க­ளை­விட… மருத்­து­வர்­கள் தந்த பயிற்­சியை விட… எம்.ஜிஆ­ருக்கு புத்­து­ணர்ச்சி கொடுத்­தது மறு­வாழ்வு கொடுத்­தது வேறு யாரு­மல்ல எம்.ஜி.ஆரே தான்.

ஆமாம்!... அவ­ரு­டைய பழைய படங்­களை அவரே வீடி­யோ­வில் போட்­டுப் போட்­டுப் பார்த்­தார், பார்க்­கும் போது இப்­படி ஆடிப் பாடி…. ஓடி….. உலவி உழைத்­துக் கொண்­டி­ருந்த நாம் மறு­ப­டி­யும் இதைப் போல ஓட வேண்­டும், உழைக்க வேண்­டும், உதவ வேண்­டும் என்­கிற உற்­சா­கம், தன்­னம்­பிக்கை, இது­தான் அவரை தமி­ழ­கத்­திற்கு பழைய முதல்­வ­ராக எம்.ஜி.ஆராக பவனி வரச்­செய்­தது.

என்­றைக்­கும் மனி­த­னு­டைய தன்­னம்­பிக்­கையே அவ­னின் தகர்க்க முடி­யாத வேர்” – இயக்­கு­நர் பி.வாசு எத்­தனை சரி­யாக சொன்­னார்…. தன்­னம்­பிக்­கை­தான் அவ­ரது வெற்­றி­யின் மகு­ட­மாக இருந்­தது.