சினிமாவில் எம்.ஜி.ஆர். – 280 – விஜயபாஸ்கர்

25 அக்டோபர் 2016, 11:00 PM

தெய்வ நம்பிக்கை!

அர­சி­யல் கூட்­டம், பொது­விழா, பாராட்டு விழா போன்­ற­வற்­றில் அவர் கலந்து கொண்­டா­லும் விழா தொடங்­கு­வது முதல் வந்து உட்­கார்ந்து கொண்­டி­ருக்­க­மாட்­டார், விழா­வின் முக்­கி­ய­மான இறு­திக்­கட்­டத்­தில்­தான் அவர் அரங்­கத்­திற்­குள் நுழை­வார்.

அதே போன்று அர­சி­யல் கூட்­டத்­தில் முக்­கிய தலை­வர் அண்ணா, கலை­ஞர், நெடுஞ்­செ­ழி­யன் போன்­ற­வர்­கள் தங்­கள் பேச்சை முடிப்­ப­தற்கு ஐந்து நிமி­டம் இருக்­கும்­போது தான் எம்.ஜி.ஆர். கூட்­டத்­திற்­குள் நுழை­வார், அவர் வந்து மேடை­யில் அமர்ந்த அடுத்த பத்­தா­வது நிமி­டத்­தில் பேச அழைக்­கப்­ப­டு­வார்.

மைக் முன் வந்து நின்று சுமார் பத்து, இரு­பது நிமிட அள­வோடு, மக்­க­ளைக் கவ­ரும்­வி­த­மாக பேசி முடித்­த­தும் அடுத்த பத்­தா­வது நிமி­டத்­தில் விடை பெற்று காரில் அல்­லது வேனில் ஏறி மக்­க­ளைப் பார்த்து கைகூப்­பிக் கொண்டு, கை அசைத்­துக் காட்­டி­ய­படி பறந்து விடு­வார்.

மின்­னல் போல வந்த வேகத்­தில் கிளம்­பிப் போய் விடு­வார், எம்.ஜி.ஆர். எதற்­காக இப்­படி மின்­னல் போல வந்து பேசி முடித்த அடுத்த அரை­மணி நேரத்­துக்­குள் சென்று விடு­கி­றார் என்­ப­தற்­குக் கார­ணம் இல்­லா­மல் இல்லை.

ஆறு கோடி மக்­க­ளால் விரும்­பிப் பார்க்­கப்­ப­டும் ஒரு எவர்­கி­ரீன் ஹீரோ – தலை­வர் – நிஜத்­தில் எப்­ப­டி­யி­ருப்­பார் தங்­கள் கனவு நாய­கன் என்­னும் ஆர்­வத்­து­டன் குவி­கின்ற ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் முன்பு அதிக நேரம் உட்­கார்ந்து கொண்­டி­ருந்­தால் தன் மீதான பிர­மிப்பு மக்­க­ளி­டம் குறை­ய­லாம் என்­பது அவ­ரின் எண்­ணம், ஒரு பொருளை அதிக நேரம் பார்த்­துக் கொண்­டி­ருந்­தால் அதன் மீதான ஈர்ப்­புக் குறைய ஆரம்­பித்­து­வி­டும் இது இயற்கை.

மக்­கள் தில­கம் இன்­னும் சிறிது நேரம் பேச­மாட்­டாரா? இன்­னும் கொஞ்ச நேரம் உட்­கார்ந்து தங்­க­ளுக்கு தரி­ச­னம் தர­மாட்­டாரா… என மக்­கள் நினைக்­கும் அள­விற்கு தன்­னு­டைய பேச்­சை­யும், இருத்­த­லை­யும் ஒரு எதிர்­பார்ப்பு மிக்­க­தாக அவர் உரு­வாக்கி இருந்­தார், அப்­போ­து­தான் அவரை மறு­ப­டி­யும் எப்­போது பார்ப்­பது என்­கிற துடிப்பு அவர்­க­ளுக்­குள் இருக்­கும்.

அடுத்த முறை அவரை இன்­னும் ஆர்­வத்­து­டன் கவ­னித்­துப் பார்ப்­பார்­கள், இதெல்­லாம் புரட்­சித் தலை­வ­ரின் வெற்­றிக்­கான ரக­சி­யங்­க­ளில் ஒன்று.

ஒரு சம­யம் நவ­ரச நாய­கன் கார்த்­திக் அவர்­க­ளு­டன் பேசும்­போது அவர் சொன்­னார்; “எப்­போது சினி­மாவை நடு­ரோட்­டில் மக்­கள் முன் எடுக்க ஆரம்­பித்­தோமோ அப்­போது முதல் நடி­கர்­க­ளின் மீதி­ருந்த பிர­மிப்­புக் குறை­யத் தொடங்­கி­விட்­டது” ஆக, மக்­கள் தில­கம் அன்றே இதை உணர்ந்­தி­ருக்­கி­றார்.

புரட்சி நடி­க­ரின் படப்­பி­டிப்­பு­கள் பெரும்­பா­லும் ஸ்டுடி­யோ­வுக்­குள் தான் நடக்­கும். அந்­தப் படத்­திற்­கு­ரி­ய­வர்­கள் தவிர வேறு யாரும் அவ­ரது படப்­பி­டிப்­புக்­குள் நுழைந்து விட முடி­யாது. பத்­தி­ரி­கை­யா­ள­ரா­னா­லும், ஒரு வி.ஐ.பி.யானா­லும் அவ­ரது அனு­மதி இருந்­தால் மட்­டுமே உள்ளே பிர­வே­சிக்க முடி­யும், வாச­லி­லேயே சின்­ன­வ­ரி­டம் அனு­மதி பெற்­றி­ருக்­கி­றீர்­களா? என விசா­ரித்த பின்னே உள்ளே நுழைய முடி­யும்.

சண்­டைக்­காட்சி பட­மாக்­கும் போது ஸ்டண்ட் மாஸ்­டர், பைட்­டர்­கள் கேமி­ரா­மேன் இவர்­கள் தவிர வேறு யாரும் அங்கு – ஏன் படத்­தின் இயக்­கு­நர்­கூட – நிற்­கக்­கூ­டாது.

படப்­பி­டிப்­புத் தளத்­தில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு பேட்டி தர­மாட்­டார், அதற்­கென்று நேரம் ஒதுக்கி, குறிப்­பிட்ட ஒரு இடத்­தில் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை கல­க­லப்­பா­கச் சந்­தித்­துப் பேசு­வார்.

அவர் சாமி கும்­பி­டு­வது போல் படத்­தில் தோன்­ற­மாட்­டார். அத­னால் அவ­ருக்கு கட­வுள் நம்­பிக்­கை­யில்லை என்­ப­தல்ல “நானோ, கழ­கமோ கோயி­லுக்­குப் போகக் கூடாது என்றோ, கட­வுள் இல்­லை­யென்றோ, பிரச்­சா­ரம் செய்­த­தில்லை, கட­வுள் பெய­ரால் நாட்­டில் மூட நம்­பிக்­கை­கள் பெரு­கு­வ­தை­யும், சோம்­பே­றித்­த­னம் வள­ரு­வ­தை­யும் தான் எதிர்த்து வந்­தி­ருக்­கி­றோம்” என்­பது புரட்­சித் தலை­வ­ரின் கருத்து.

அவ­ருக்கு தெய்வ நம்­பிக்கை இருந்­தது. முருக பக்­த­ராக இருந்­தார், அவ­ரது தனி அறை­யில் இயேசு படம் இருந்­தது. அவர் நபி­கள் நாய­கம் (ஸல்) பொன்­மொ­ழி­கள் படித்­தி­ருந்­தார். அவற்றை முஸ்­லிம் நண்­பர்­க­ளி­டம் பேசும்­போது வெளிப்­ப­டுத்­து­வார். மக்­கள் தில­கத்­தின் ஆஸ்­தான கதை, வசன கர்த்­தா­வான கலை­மா­மணி ரவீந்­தர் ஒரு இஸ்­லா­மிய அன்­பர்.

இவை­யெல்­லாம் தாண்டி அவர் தன்னை எல்லா மதத்­த­வர்க்­கும் வேண்­டி­ய­வ­னாக எல்­லோ­ருக்­கும் பொது­வான கலை­ஞ­னா­கத் தன்னை அடை­யா­ளப் படுத்­திக் கொள்­வ­தையே பெரி­தும் விரும்­பி­னார், அத­னால் அவர் படங்­க­ளில் தன்னை இன்ன சாமியை வணங்­கு­ப­வன். இன்ன மதத்­துக்­குச் சொந்­தக்­கா­ரன் என்­பது போல் காட்­டிக் கொள்­வ­தைத் தவிர்த்­தார்.