பிறந்த நாள் பலன்கள் –(31.12.2015 முதல் 6.1.2016 வரை)

பதிவு செய்த நாள்

31
டிசம்பர் 2015
02:27

1,10,19,28  A, I, J, Q, Y 

எதிர்பாராத வரவுகள் குடும்ப சிரமங்களை குறைக்கும். செய்யும் தொழிலில் மேன்மையாக இருக்கும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் விலகும். தொழிலாளர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரிகளுக்கு வியாபார விருத்தியாகும். கல்வியாளர்களுக்கு, மேன்மையாக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை விருத்தி லாபம் தரும். பெண்களுக்கு குடும்பப்பணியில் சிறப்பு கூடும்.

2,11,20,29  B, K, R 

பயண அலைச்சல் மிகுந்திருக்கும். ஆன்மிக ஈடுபாடு இறையருள் தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி திறன் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கல்வியாளர்களுக்கு முழு ஈடுபாடு முன்னேற்றம் தரும். விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் முன்னேற்றம் பெறும். பெண்களுக்கு குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.

3,12,21,30  C, G, L, S

உங்கள் செயல்பாடுகளில் சிறப்பு கூடும். குடும்பப்பணிகளில் அக்கறை காட்டுவீர்கள். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி திறன் கூடும். புதிய முயற்சி அனுகூலமாகும். வியாபாரிகளுக்கு பண நெருக்கடி வரும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். கல்வியாளர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். ஞாபகசக்தி கூடும். விவசாயிகளுக்கு குடும்பப்பணிகளில் உற்சாகம் கூடும். விருந்தினர் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

4,13,22,31 D, M, T

பணவரவுகள் சிரமங்களை குறைக்கும். உறவும் நட்பும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலாளர்களுக்கு எதிர்பார்க்கும் விஷயம் தள்ளிப்போகும். வியாபாரிகளுக்கு போட்டி காரணமாக சிரமங்கள் அதிகரிக்கும். கல்வியாளர்களுக்கு சுமாரான சூழ்நிலை இருந்தாலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு சுபச்செலவுகள் வரும். கால்நடை விருத்தி லாபம் தரும். பெண்களுக்கு குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும்.

5,14,23  E,H, N, X

உங்கள் பேச்சு சாதுார்யம் நன்மை பயக்கும். குடும்பத்தில் அத்தியாவசிய தேவை நெருக்கடி தரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழிலதிபர்களுக்கு தொழில் சார்ந்த தேவைகள் அதிகரிக்கும். கடின உழைப்பு இருக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் மிகுந்திருக்கும். வியாபார விருத்தி லாபம் தரும். கல்வியாளர்களுக்கு ஞாபகமறதி தொல்லை தரும். முன்னெச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் சிறப்பு கூடும். பராமரிப்பு செலவினங்கள் வரும். பெண்களுக்கு குடும்பப்பணி உற்சாகமாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும்.

6,15,24 U, V, W

எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாகும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். எதிர்பாராத விருந்தினர் வருகை சிரமம் தரும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகளின் அனுசரணை உற்சாகம் தரும். தொழிலதிபர்களுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும். விடாமுயற்சி தேவை. கல்வியாளர்களுக்கு கடின உழைப்பு முழு ஈடுபாடு தேவை. விவசாயப்பணிகள் முன்னேற்றம் பெறும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். மகிழ்ச்சி தரும்.

7,16,25  O,  Z

பெரியவர்களின் ஆசி, உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்த சிரமங்கள் விலகி முன்னேற்றம் வரும். வியாபாரிகளுக்கு முதலீடு அதிகமாகும். வியாபாரத்தில் சுபிட்ஷமாக சூழ்நிலை இருக்கும். கல்வியாளர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் பொழுது போக்கு அம்சத்தை தவிர்ப்பது உத்தமம். விவசாயிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பப்பணியில் சிறப்பு கூடும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

8,17,26 F, P

நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும். வெளியூர் பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். செய்யும் தொழிலில் மேன்மை கிட்டும். தொழிலதிபர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கல்வியாளர்களுக்கு கல்வியில் முழு ஈடுபாடு இருக்கும். முயற்சி பலன் தரும். விவசாயிகளுக்கு கால்நடை விருத்தி பொருளாதார மேன்மை தரும். பெண்களுக்கு குடும்பத்தில் பணி நெருக்கடி மனச்சோர்வு தரும்.

9,18,27

குடும்பத்தேவை அதிகரிக்கும். ரிப்பேர் செலவு வரும். செய்யும் தொழிலில் சிறப்பு கூடும். எதிர்பாராத உதவி மகிழ்ச்சி தரும். தொழிலதிபர்களுக்கு தொழிலாளர் பிரச்னை சிரமப்படுத்தும்.வியாபரத்தில் கடின உழைப்பு இருக்கும். கல்வியாளர்கள் கல்வி சம்பந்தப்பட்ட புதிய விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப்பணிகள் நெருக்கடி தரும். செலவினங்கள் சிரமம் தரும். பெண்களுக்கு குடும்பப்பணிகளில் பொறுப்பு கூடும்.