உபி காங். தலைவியே கட்சி தாவுகிறார்

பதிவு செய்த நாள் : 18 அக்டோபர் 2016 16:34


உபி. மாநில காங். தலைவராக இருந்தவர் ரீடா பகுகுணா. உபி சட்டசபைத் தேர்தலில்  முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அறிவித்தது முதல் அவர் அதிருப்தியுடன் காணப்படுகிறார். சமீபத்திய கருத்துக்க ணிப்புகளிலும் காங். 4வது இடம் தான் வரும் என்று  தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரீடா பகுகுணா பாஜவில் சேர முடிவு செய்துள்ளார்.  இது பற்றி பாஜ வட்டாரத்தில் விசாரித்த போது இது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றனர்.  ரிடா பாஜவில் சேருவது பற்றி எங்களுக்கு தகவல் இல்லை. இருப்பினும் மூத்த தலைவரான அவரிடம் இது பற்றி பேசுவோம் என்று காங். மூத்த தலைவர்கள் கூறினர்.