சினிமாவில் எம்.ஜி.ஆர். – 278 – விஜயபாஸ்கர்

11 அக்டோபர் 2016, 10:23 PM

தொடர் இன்ப அதிர்ச்சிகள்!

எம்.ஜி.ஆரின் கொடை உள்­ளம் பல­ரும் அறிந்­ததே. அதி­லும் திரைப்­ப­டத்­து­றை­யைச் சேர்ந்த ஒரு­வர் சிர­மப்­ப­டு­வதை காணப் பெறா­மல் எப்­படி உதவ ஓடோடி வந்­தார் என்­ப­தற்கு இது ஒரு உதா­ர­ணம். அதே நேரத்­தில் இது ஒரு நன்­கொடை போல­வும் ஆகி­வி­டா­மல் பிஸி­ன­ஸா­கவே செய்­தார். நான் தன்­மா­னத்­து­டன் தலை நிமிர்ந்து நிற்க வழி­வ­குத்­தார். எம்.ஜி.ஆரு­டைய கணக்கு வழக்­கு­க­ளைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்த, ஆடிட்­டர்­தான் சித்­ரா­ல­யா­விற்­கும் ஆடிட்­டர், அவ­ரது மகன் என்.சி.சுந்­த­ர­ரா­ஜன் எனக்கு மிக­வும் நெருங்­கிய நண்­பர். அவ­ரி­டம் எம்.ஜி.ஆரின் கடி­தத்­தைக்­காட்டி யோச­னைக் கேட்­டேன். அவர் உடனே கிர­ஸெண்ட் மூவிஸ் குரூப் என்ற நிறு­வ­னத்தை அணு­க­லாம். அவர்­கள் பெரிய அள­வில் சினி­மா­வுக்கு பைனான்ஸ் செய்­வார்­கள். விநி­யோ­கஸ்­தர்­க­ளும் கூட நான் தான் அவர்­க­ளுக்கு ஆடிட்­டர், அத­னால் அவர்­களை எனக்கு நன்கு தெரி­யும் என்­றார்.

அடுத்­த­நாளே கிர­ஸெண்ட் மூவிஸ் பாஸ்­கர், யாசின் எனது வீட்­டுக்கு வந்­து­விட்­டார் சுந்­த­ர­ரா­ஜ­னு­டன். விவ­ர­ம­றிந்­த­தும் அவர் ரொம்ப ஆர்­வ­மா­கப் பேசி­னார். வழக்­க­மான இதர பங்­கு­தா­ரர்­க­ளை­யும் கலந்து ஆலோ­சித்த பிற­கு­தான் முடி­வெ­டுப்­பேன். ஆனால் இந்த விஷ­யத்­தில் இப்­பவே ஓ.கே. சொல்­கி­றேன், ஏனென்­றால் என் பாகஸ்­தர்­கள் ஆட்­சே­பனை ஏதும் சொல்­லவே மாட்­டார்­கள் என்­பது நிச்­ச­யம். எம்.ஜி.ஆரின் செல்­வாக்கு என்னை மலைக்க வைப்­ப­தாக இருந்­தது. மறு­நாளே யாசின் திரும்­ப­வும் வந்­தார். உங்­க­ளுக்கு பைனான்ஸ் செய்­வ­து­டன் நிறுத்­திக்­கொள்ள நாங்­கள் விரும்­ப­வில்லை. திருச்சி, தஞ்­சா­வூர், மதுரை, ராம­நா­த­பு­ரம், வட­ஆற்­காடு, தென்­ஆற்­காடு, செங்­கல்­பட்டு, கோயம்­புத்­தூர் ஆகிய ஏரி­யாக்­க­ளின் பட விநி­யோ­கத்­தை­யும் ஏற்­கத் தயா­ராக இருக்­கி­றோம். அதற்­கு­ரிய அட்­வான்ஸ் பணத்­தை­யும் இப்­போதே நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம் என்­றார். நான் திக்­கு­முக்­கா­டிப் போனேன். இந்த மாதிரி எதிர்­பா­ராத வித­மாக அட்­வான்­ஸும், கட­னும், கிடைக்க, உட­ன­டி­யாக வேலை­யைத் துவங்­கி­னேன், ’உரி­மைக்­கு­ரல்’ படப்­பி­டிப்பு பூஜைக்­கான ஏற்­பா­டு­கள் பிர­மா­த­மாக நடந்­தன. சினிமா துறை­யில் இருந்த அத்­தனை முக்­கி­யஸ்­தர்­க­ளும் திர­ளாக வந்­தி­ருந்து என்னை வாழ்த்­திக் கௌர­வித்­தார்­கள்” என்­கி­றார் இயக்­கு­நர் ஸ்ரீதர்.

சிவா­ஜியை வைத்து பல படங்­களை இயக்­கிய ஸ்ரீதர் மட்­டும் அல்ல இன்­னும் பல முன்­னணி இயக்­கு­நர்­கள் சிவா­ஜியை வைத்து படங்­கள் எடுத்து நொடித்­துப்­போன நிலை­யில் இனி மறு­ப­டி­யும் நிமிர்ந்து நிற்க எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்­தால் தான் முடி­யும் என்று எம்.ஜி.ஆரை தேடி வந்­த­னர். உயர்ந்த எண்­ணங்­க­ளும், உண்­மையை நேசிக்­கும் குண­மும், உழைப்பை –உழைப்­ப­வர்­களை மதிக்­கும் பண்­பும் கொண்ட உயர்ந்த மனி­தன் எம்.ஜி.ஆர். அவரை நம்­பி­ய­வர்­கள் வீணா­கிப் போன­தில்லை, வாழ்க்­கை­யில் உயர்ந்­தி­ருக்­கி­றார்­கள் உண்மை இது பொய் இல்லை. அவ­ரு­டன் அறி­மு­க­மான – நடித்த – நடி­கை­கள் (சரோ­ஜா­தேவி, ஜெய­ல­லிதா, மஞ்­சுளா, லதா) ஒரே படத்­தின் மூலம் இந்­தியா எங்­கும் விளம்­பர வெளிச்­சம் பெற்று பிர­ப­ல­மாகி இருக்­கி­றார்­கள்.

“எம்.ஜி.ஆர். ரொம்ப பெருந்­தன்­மை­யான மனி­தர், அவர் ஆயி­ரம் சூரி­யன்­க­ளுக்­குச் சமம், அது­தான் அவரை நான் என் தெய்­வம், என் குரு”னு சொல்­றேன், அவர் இல்­லேன்னா, இந்த சரோஜா தேவி இல்லை, “இந்­தப் போண்ணு நல்­லா­யி­ருக்கு ஹீரோ­யினா நடிக்க போடுங்­க’னு ரெண்டு, மூணு பேர்­கிட்ட சொன்­னாரு, எல்­லா­ரும் யோசிச்­சாங்க, சட்­டுனு தான் எடுத்த ‘நாடோடி மன்­னன்’ படத்­துல என்னை ஹீரோ­யினா புக் பண்­ணி­னார். அப்­பு­றம் நடந்­தது எல்­லா­ருக்­கும் தெரி­யும்” என்­பது சரோ­ஜா­தே­வி­யின் நன்­றி­யுரை. ”நளினி என்று இயற்­பெ­யர் கொண்ட எனக்கு லதா என்று எம்.ஜி.ஆர். பெயர் சூட்­டி­யது முதல் அது ராசி­யாகி விட்­டது. லதா என்ற பெயர் எங்­கும் பிர­ப­ல­மா­னது.

எம்.ஜி.ஆர். கைராசி மிக்­க­வர், அவர் என்னை நடி­கை­யாக்­கிய முதல் படத்­தி­லேயே (உல­கம் சுற்­றும் வாலி­பன்) நான் சூப்­பர் ஹிட் நடி­கை­யா­கி­விட்­டேன், அவ­ரு­டன் அடுத்­த­டுத்து நடித்த ‘நினைத்­ததை முடிப்­ப­வன்’, ‘உரி­மைக்­கு­ரல்’, ‘நவ­ரத்­தி­னம்’, ‘மீனவ நண்­பன்’ எல்­லாமே வெற்றி மேல் வெற்றி தந்த படங்­கள்” என்­கி­றார் நடிகை லதா. அவர் படங்­க­ளுக்கு பாடல் எழு­தி­ய­வர்­கள் கண்­ண­தா­சன், பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம், புல­மைப் பித்­தன், மரு­த­காசி, வாலி, முத்­து­லிங்­கம், நா.காம­ரா­சன். இவர்­க­ளின் பாடல்­கள் பெரும்­பு­கழ் பெற்­ற­தும் வெகு மக்­க­ளால் பாடப்­பட்­டது என்­றால் அது எம்.ஜி.ஆருக்கு எழு­திய பாடல் என்­ப­தால் தான், இதை வாலி அழுத்­த­மாக பின்­வ­ரு­மாறு (1988-ல்) பாடு­கி­றார்;  “பொன்­ம­னச் செம்­மலே – என்  பொழுது புல­ரக் கூவிய சேவலே!  உனக்­கென்று நான் எழு­திய  முதல் வரி­யில் தான்  உல­குக்கு என் முக­வரி  தெரிய வந்­தது!  என் கவிதா விலா­சம்… உன்­னால் தான்  விலா­ச­முள்ள கவி­தை­யா­யிற்று! இந்த நாட்­டுக்­குச் சோறிடு முன்­னமே  என் பாட்­டுக்­குச் சோறிட்­ட­வன் நீ!  என்னை வறு­மைக் கடல்­மீட்டு… வாழ்க்­கைக் கரை­சேர்த்த பட­கோட்­டியே! நான் பாடிய பாடல்­களை  நாடு பாடி­யது… ஏழை எளி­ய­வர்­க­ளின்  வீடு பாடி­யது!” அதே போன்று அவ­ருக்கு பின்­னணி பாடி­ய­வர்­கள் டி.எம்.சௌந்­த­ர­ரா­ஜன், சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன், எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணி­யம் எம்.ஜி.ஆரின் குரல்­க­ளா­கவே பேசப்­பட்­டார்­கள்; எங்­கும் பேசப்­பட்­டார்­கள். “பத்­தோடு ஒன்­றாக நானும் ஒரு பாட­க­னாக இருந்த காலத்­தில்  ‘அடி­மைப்­பெண்’ படத்­தில் எம்.ஜி.ஆருக்­காக ‘ஆயி­ரம் நிலவே வா’ பாடல் பாடி­ய­தின் மூலம் ஒரே நாளில் அனைத்­துப் பத்­தி­ரி­கை­க­ளி­லும் பேசப்­பட்­டேன். தமிழ் நாட்­டின் பட்­டித்­தொட்டி எங்­கும் பேசப்­பட்­டேன். ஒரே நாளில் உய­ரத்­தில் ஏற்றி வைத்­த­வர் எம்.ஜிஆர். இந்த நன்­றியை என்­றும் மறக்க மாட்­டேன்” இது எஸ்.பி.பி.யின் உள்­ளத்­தின் வார்த்­தை­கள். அவரை வைத்­துப் படம் எடுத்­த­வர்­க­ளும், விநி­யோ­கஸ்­தர்­க­ளும், தியேட்­டர்­கா­ரர்­க­ளும் நன்­றா­கச் சம்­பா­தித்­தார்­கள், இவர் படத்­தில் பணி­யாற்­றிய அத்­தனை பேரும் புக­ழும் பண­மும் பெற்­றார்­கள். எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடி­க­ருக்­கும் இப்­படி ஒரு செல்­வாக்கு, மக்­கள் ஆத­ரவு, கைராசி, முக­ராசி எல்­லாம் அமைந்­த­தில்லை. அவர் மறைந்து 23 ஆண்­டு­க­ளுக்கு மேலாகி இன்­ன­மும் அவ­ரது அலை ஓய­வில்லை, மக்­கள் செல்­வாக்கு குறை­ய­வில்லை…. அது­தான் அவ­ரது வெற்­றி­யின் ரக­சி­யம்.