ஊரி தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு

பதிவு செய்த நாள்

21
செப்டம்பர் 2016
00:23

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் ஊரி நகரில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கான முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஊரி தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)  வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆறு பேர் கொண்ட தேசிய புலனாய்வு அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரிப்பதற்காக இந்தக் குழுவினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிப்பட இருப்பதாகவும், அவர்களின் படங்கள் வெளியிடப்பட்டு அவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.