தடுமாறுகிறது த.மா.கா.

பதிவு செய்த நாள்

03
செப்டம்பர் 2016

தமி­ழ­கத்­தில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு எதிர்­கா­லம் உண்டா? இல்­லையா? என்ற பட்­டி­மன்­றம் நடந்து கொண்­டி­ருக்­கும் போது நாங்­கள்­தான் இங்கு உண்­மை­யான காங்­கி­ரஸ் என தமிழ் மாநில காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் மார் தட்­டித் திரி­கி­றார்­கள்.

1996-ம் ஆண்டு தமிழ்­நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் சூழ்­நிலை கார­ண­மாக, மூத்த காங்­கி­ரஸ் தலை­வர் மறைந்த ஜி.கே. மூப்­ப­னார் தொடங்­கிய தமிழ்­மா­நில காங்­கி­ரஸ் வேறு, இப்­போது அவ­ரது புதல்­வர் ஜி.கே. வாசன் தொடங்­கிய த.மா.கா. வேறு என்­பதை நடை­பெற்று முடிந்த சட்­ட­மன்ற பொதுத் தேர்­தல் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிச்­சம் போட்­டுக் காட்­டி­விட்­டது. அப்­பா­வின் புகழ் நிழ­லில் மகன்­கள் இனி கோலோச்ச முடி­யாது அவ­ர­வ­ரும் மக்­க­ளுக்­காக பாடு­பட்­டால்­தான், அவர்­க­ளுக்­காக போராடி பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கண்­டால்­தான் அர­சி­ய­லில் நிலைத்­தி­ருக்க முடி­யும் என்­ப­து­தான் இன்­றைய எதார்த்த நிலை.

வாசன் தலை­மை­யி­லான  த.மா.கா.வை பொறுத்­த­வரை, அதை ஆரம்­பிக்­கும்­போது அது­வரை தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டி­யின் தலை­மைப் பொறுப்­பில் இருந்த பி.எஸ்.ஞா­­ன­தே­சி­கன், பொரு­ளா­ளர் கோவை தங்­கம் உள்­ளிட்ட மாநில நிர்­வா­கி­கள், சுமார் 28 மாவட்­டத் தலை­வர்­கள் மக­ளிர் காங்­கி­ரஸ், இளை­ஞர் காங்­கி­ரஸ், மாண­வர் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட அமைப்­பு­க­ளின் மாநில, மாவட்ட  நிர்­வா­கி­கள், நூற்­றுக்­க­ணக்­கான வட்­டார, சர்க்­கிள் கமிட்டி நிர்­வா­கி­கள் என அணி­வ­குத்து வந்­த­னர்.

திருச்சி மாநா­க­ரில் கொட்­டும் மழை­யில் நடை­பெற்ற கட்­சி­யின் அறி­முக மாநாட்­டிற்கு வந்த கூட்­டம், இது அதி­முக, திமு­க­வுக்கு அடுத்த மாற்று அர­சி­யல் சக்­தி­யாக வரும் என்று ஒரு சில ஊட­கங்­கள் எழு­தக்­கூ­டிய அள­விற்கு இருந்­தது உண்­மை­தான். ஆனால், ஒரு சில மாதங்­க­ளில் கட்­சி­யின் மாநில நிர்­வா­கி­கள், மாவட்­டத் தலை­வர்­கள் நிய­ம­னம் நடை­பெ­றும் சூழ­லி­லேயே தலை­வர் வாசன் பெரும் பிரச்­னையை சந்­திக்க நேர்ந்­தது. கட்­சி­யி­லி­ருந்த மூத்­த­வர்­க­ளான எஸ்.ஆர்.பால­சுப்­பி­ர­ம­ணி­யம், பி.எஸ்.ஞான­தே­சி­கன், பீட்­டர் அல்­போன்ஸ், ஞான­சே­க­ரன், கோவை தங்­கம், விஸ்­வ­நா­தன், பார­மலை உள்­ளிட்­ட­வர்­கள் தங்­கள் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு கட்­சிப் பத­வி­களை பெற்­றுத்­த­ரு­வ­தில்  வாச­னுக்கு பெரும் சிக்­கலை உரு­வாக்­கி­னர்.

மாநில பொறுப்­புக்­கும், மாவட்ட பொறுப்­பு­க­ளுக்­கும் நிர்­வா­கி­களை நிய­மிப்­ப­தில் ஏற்­பட்ட நெருக்­கடி, சிக்­கல், குழப்­பம் த.மா.கா.வுக்கு அப்­போதே ஒரு­வித பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தி விட்­டது. குறிப்­பாக மாவட்­டத் தலை­வர்­கள் நிய­ம­னத்­தில் அவர் கையாண்ட அணு­கு­முறை கட்­சி­யி­ன­ரி­டையே பெரும் அதி­ருப்­­­தியை உரு­வாக்­கி­யது. ஒரே மாவட்­டத்தை 3,4 ஆக பிரித்து இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­திக்கு ஒரு மாவட்­டம் என்ற அள­விலே நிர்­வா­கி­களை நிய­மித்த போக்­கால் ஒரு சில மாவட்­டத் தலை­வர்­கள் கட்­சி­யி­லி­ருந்து விலகி மீண்­டும் சத்­திய மூர்த்­தி­ப­வன் நோக்கி படை­யெ­டுத்து காங்­கி­ர­சில் ஐக்­கி­யம் ஆகும் நிலை ஏற்­பட்­டது. கட்சி தொடங்­கப்­பட்ட நாள் முதல் த.மா.கா. ஆத­ரவு நிலை யாருக்கு? எனத் தெரி­யாத அள­விற்கு வாச­னின் அறிக்­கை­க­ளும், பேட்­டி­க­ளும் அமைந்­தன. வெளிப்­ப­டை­யாக அதி­முக ஆத­ரவு, அல்­லது திமுக ஆத­ரவு என்ற நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தால், அடுத்து நடை­பெற்ற சட்ட மன்­றத் தேர்­த­லில் கூட்­டணி அமைத்து தேர்­தலை சந்­தித்து கணி­ச­மான எம்.எல்.ஏக்­க­ளைப் பெற்­றி­ருக்­க­லாம். அதை விடுத்து நடு­நிலை தவ­றாத புதிய யுக்­தி­யு­டன் கட்­சி­களை நடத்­து­வ­தாக நினைத்­துக் கொண்டு, வாய்ப்­பு­களை, சரி­யான சந்­தர்ப்­பங்­களை தவ­ற­விட்­டார்.

த.மா.கா.வின் பெரும்­பா­லான நிர்­வா­கி­க­ளி­டம் அதி­மு­க­வு­டன் கூட்­டணி அமைக்க வேண்­டும் என்ற மன­நிலை இருந்­த­போ­தும், கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது, உரிய நேரத்­தில், சரி­யான வழி­மு­றையை பின்­பற்றி முறை­யான பேச்சு வார்த்­தையை தொடங்­கா­மல் கோட்­டை­விட்டு விட்­டார் வாசன். அதன் விளைவு, மக்­கள் நலக் கூட்­டணி வலை­யில் விழுந்து, கட்­சியை காவு கொடுத்­து­விட்­டார். இத­னால்,  எஸ்.ஆர். பால சுப்­பி­ர­ம­ணி­யன், ஞான­சே­க­ரன், காயத்­திரி போன்ற முன்­ண­னி­யி­னர் அதி­மு­க­வுக்­கும், பீட்­டர் அல்­போன்ஸ், விஸ்­வ­நா­தன் போன்­றோர் மீண்­டும் காங்­கி­ர­சுக்­கும் சென்று விட்­ட­னர். மீதம் உள்­ள­வர்­கள் ஊமை­யன் கண்ட கனவு போல, எதை­யும் சொல்ல முடி­யா­மல், தமாகா அர­சி­யல் எதிர்­கா­லம் என்­னா­குமோ என்ற கவ­லை­யில் தடு­மா­றிக் கொண்­டுள்­ள­னர்.

எதிர் வரும் உள்­ளாட்­சித் தேர்­த­லி­லா­வது அதி­முக அல்­லது திமுக கூட்­ட­ணி­யில் சேர்ந்து மாவட்­டத்­துக்கு 10, 20 கவுன்­சி­லர்­கள் இடத்­தை­யா­வது பெற முடி­யாதா?  என்ற ஏக்­கத்­தில் ஒரு சில நிர்­வா­கி­கள் உள்­ள­ன­ராம். மேலும் சில அனு­ப­வம்­மிக்க த.மா.கா. நிர்­வா­கி­கள் தனிக்­கட்சி வேண்­டாம் அன்னை சோனி­யாவை சந்­தித்து மீண்­டும் காங்­கி­ர­ஸில் ஐக்­கி­ய­மாகி விட­லாம் என வாச­னுக்கு ஆலோ­சனை கூறு­கி­றார்­க­ளாம். 

அண்­மை­யில் டெல்லி சென்ற வாசன் சோனி­யாவை சந்­தித்து உடல் நலம் விசா­ரித்து விட்டு, அப்­ப­டியே இணைப்­புக்­கான அப்­ளி­கே­ஷன் போடத்­திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­க­வும் அது நடை­பெ­ற­வில்லை என்­றும் கூறு­கி­றார்­கள். எனவே, இன்­றைய நில­வ­ரப்­படி த.மா.கா. பெரும் தடு­மாற்­றத்­தில், திசை தெரி­யா­மல் பய­ணம் செய்­வ­தா­கவே தெரி­கி­றது.