சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 56 – துரை கருணா

பதிவு செய்த நாள்

20
ஆகஸ்ட் 2016

வேறுபாடு பார்க்க மாட்டோம்!

1979–ம் ஆண்டு ஏப்ரல் 18–ம் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்ற காவல்துறை மான்ய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி:–

எம்.ஜி.ஆர் : ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமாக நடக்கிறீர்கள். ஜனதா கட்சிக்கு சாதகமாக இல்லை, பாதகமாக இருக்கிறீர்கள் அதே சமயத்தில் தேசீய காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கி-றீர்கள் என்று குறை கூறியதோடு ஆளும் கட்சிக்காரர்களுக்கு விட்டுக்கொடுக்கிறீர்கள் என்றும் ஜேம்ஸ் கூறினார். அதே குற்றச்சாட்டு, லாரிகளில் வருகிற குற்றச்சாட்டை உமாநாத் அவர்கள் இன்று பேசினார். ஆட்களை ஏற்றி,  லாரிகளுடைய எண்களை எல்லாம் சொல்லி அவைகளையெல்லாம் நான் அங்கே பார்த்தேன். என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள் என்று நீங்கள் கேட்பதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்று எண்ணுகிற போது எந்தெந்த லாரிகளின் மீது,  நடவடிக்கை எடுத்தோம் என்பதை சொல்லியாக வேண்டியவனாக இருக்கிறேன்.

குறிப்பாக, அகில இந்திய அதிமுக தோழர்கள் கொண்டு வந்த லாரிகள் என்னென்ன லாரிகள் என்று குறிப்பிடுகிறார்களோ அவைகளின் மீது வழக்கு  போடப்பட்டு இருக்கிறது. சில வழக்குகள் போடப்-பட்டு ரூ.25 அபராதம் கட்டியிருக்கிறார்கள். சில லாரிகளுக்கு இப்படி வழக்கு போட்டதன் விளைவாக சில இடங்களில் ரூ.50 கட்டியிருக்கிறார்கள். ஆகவே, நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இல்லை என்-பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். 

அதேபோல் தேசிய காங்கிரஸை சேர்ந்தவர்களும் எப்போதாவது அந்த  காரியங்களை செய்து இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்குவது இல்லை. ஆனால் ஜனதா கட்சியை சேர்ந்-தவர்களுக்கு நாங்கள் ஏதாவது விட்டுக் கொடுத்து இருந்தோம் என்றால் சில சமயம் தவறு செய்து விட்டார்கள், முதல் முறையாக என்று சொல்லி ஒரு வேளை விட்டுக் கொடுத்து  இருக்கலாம். மற்ற-வர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம் என்று அவர் குற்றம் சாட்டுவதற்கு அது காரணமாக இருந்து இருக்கும். அப்படி இருந்தாலும் நான் ஒன்றை சொல்கிறேன். இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்த காரணத்தை முன்னிட்டும் வேறுபாடு பார்த்து எந்த காரியத்தையும் செய்யத் தயாராக இல்லை என்ப-தையும் அதே நேரத்தில், லாரிகளில்....

ரா. கிருஷ்ணன் : அக்டோபர் 23–ம் தேதி பந்த்  நடந்தபோது திருநெல்வேலியில் லாரிகளில் போலீசை வைத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்களே, அவர்கள் மீது எப்படி நடவ-டிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆர் : காவல்துறையை  சார்ந்தவர்கள் லாரியை பயன்படுத்த வேண்டிய அவசியம் நேரும்-போது பாதுகாப்போடும், இத்தனை மைல் வேகத்தில் தான் ஓட்ட வேண்டும் என்ற நிலையிலேயும், எத்தனை ஆட்களை அதிலே ஏற்றிக்கொண்டு வரலாம் என்கிற  கணக்கோடும் அங்கே லாரியிலே வந்திருக்கிறார்கள்.

அதே போன்று உறுப்பினர் உமாநாத் அவர்கள் ஒரு குற்றச்சாட்டை சொன்னார்கள். கைது செய்கிறவர்-களை வேனிலே ஏற்றிச்செல்கிற போது அவர்களுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லையா என்று கேட்-டார்கள். உயிருக்கு பாதுகாப்பு தேவை அதிலே மாறுபட்ட கருத்தில்லை. ஒரு மாநாடு நடத்தப்படும்-போது வெளியூர்களிலிருந்து  வரவேண்டியவர்கள் வருவதற்கு வாய்ப்பிருக்க வேண்டும் என்பதற்கா-கத்தான் முன்னால் அது  அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் போகப்போக குழப்பத்தை விளைவிப்ப-தற்கு ஆட்கள் கொண்டு வருவது என்கிற நிலைமை நாட்டில் உருவாகிவிட்டதன் விளைவாக ஆபத்து உண்டாக கூடிய நிலைமை ஏற்பட்டு அதன் பிறகு இவைகளை எல்லாம் தடுப்பதற்காகத்தான் லாரி-களை அவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்று சொன்னோமே தவிர உண்மையிலேயே கொள்கைக்காக பாதுகாப்போடு ஒரு மாநாட்டுக்கு வருவது என்றிருந்தால் அதற்கான உத்தரவாதமும் இருந்தால்,  பாதுகாப்போடு இரவு வேளையில் டிரைவர்கள் தூங்குகின்ற நிலைமை இல்லாமல் நல்ல ஓய்வு எடுத்த பிறகு பாதுகாப்போடு ஓட்டிக்கொண்டு வருவார்கள் என்ற உத்தரவாதம் எல்லாம் இருக்குமேயானால் இதைப்பற்றி இந்த அரசு மீண்டும் பரிசீலிக்க தயங்காது.

ஆனால் நிலைமை என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு லாரியிலே வரும்போது எத்தனை பேர்கள் இறந்தார்கள்,  எத்தனை பேர்கள் காயம் அடைந்தார்கள், எத்தனை பேர்கள் குழப்-பத்தை விளைவிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டார்கள் என்பதை எல்லாம்  சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஒரு பெரியவர் அல்லது யாராவது ஒருவர், நாட்டின் தலைவர் மறைந்திருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் அவருடைய இறுதி நிகழ்ச்சிக்காக பல்வேறிடங்களிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும், தாலுக்காக்களிலிருந்தும் வருவதற்கு மக்கள் வர விரும்புவதும் ஊர்வலங்களிலே கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதும் இயற்கை. அது தவிர்க்க முடியாதது.

ஆனால் அப்படி வருகின்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில்எல்லா வசதியும் செய்தி-ருக்கிறோம் என்றால் அதை இந்த அரசு பரிசீலிக்க தயாராக இருக்கிறது என்று மீண்டும் சொல்லிக்-கொள்கிற அதே நேரத்தில் எப்படிப்பட்டவர்கள் வருகிறார்கள் என்பதையும் பார்த்துச் செயல்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இங்கே குற்றம் சாட்டியவர்கள் பொதுவாக ஒரே ஒரு குற்றச்சாட்டைத் தான் பல்வேறு உறுப்பினர்-களும் கூறி இருக்கிறார்கள். அதிலே போலீஸ் அதிகாரிகளுடைய அட்டூழியம் என்கிற வார்த்தையை நான் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அட்டூழியம் என்ற வார்த்தையை யாரும் உபயோகப்படுத்த-வில்லை. ஆனால் அந்த வார்த்தையை நான் சேர்த்து விளக்கம் சொல்ல விரும்புகிறேன். அதுதான் உண்மையான வார்த்தையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அவ்வளவு பெரிய கொடுமைகள் செய்கிறார்கள் என்று கூறினார்கள். பொய் வழக்குகள் போடுவது, வேண்டுமென்றே வழக்குகள் போடுவது பற்றிச் சொன்னார்கள். அதோடு காணோம் என்கிறவர்களை கண்டுபிடித்து கொடுப்ப-தில்லை என்றெல்லாம் சொன்னார்கள். அதற்குரிய விவரங்களை எல்லாம் பின்னால் படித்து காண்பிக்க இருக்கிறேன்.

ஆனாலும் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். காவல் துறையைப் பற்றி எவ்வளவு மோசமாக விமர்சனம் செய்தார்களோ அதேபோல அந்த துறையிலே உள்ளவர்களின் வருமானத்தையும் பெருக்க வேண்டும் என்பதை பற்றியும் பேசினார்கள். அதிலிருந்து எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. காவல் துறையைப்பற்றி அவர்கள் பலவற்றை சொன்னாலும் ஏதோ அந்த துறையிலே இருக்கின்றவர்களுக்கு உத்தரவாதமான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்கிற நல்ல  எண்ணம் இங்கே இருக்-கின்ற எல்லோருக்கும் இருக்கிறது என்பதை பார்க்கின்றபோது மகிழ்ச்சி கொள்கிறேன்.

தவறுகள் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. இங்கே புள்ளி விவரத்தை ஜேம்ஸ் படித்து காண்பித்தார். ஒன்றை அழுத்தந்திருந்தமாக நான் சொல்ல வேண்டும். கண்டுபிடித்து தண்டனைக்கு ஆளாக்கப்படுகிற வழக்குகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இப்படி நாம் பிரித்து பார்க்க வேண்டும். பதிவு செய்யப்படுகிற வழக்குகள் எத்தனை என்பதையும் கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை என்பதையும், ஒப்பிட்டு பார்த்தால்,  இந்த புள்ளி விவரங்கள் சரியாக இருக்குமா என்பதை புரிந்துகொள்ள முடியும்.

உறுப்பினர்கள், சிலர் மன்றத்தில் பேசும்போது அவசரக்கால சட்டத்தில் என்னென்ன நன்மைகள் ஏற்-பட்டன. என்னென்ன தீமைகள் ஏற்பட்டன என்பதைபற்றி சொல்லும் போது அன்றைக்கு என் மீது ஆத்-திரப்பட்டது உண்டு. அந்த வேதனையை வார்த்தைகளால் கொட்டினார்கள். ஆனால், இன்றைய தினம் புள்ளிவிவரத்தை பார்க்கும் போது 1976–ம் ஆண்டுக்கு வரும்போது கொலைகள் மிக மிகக் குறைந்தி-ருப்பதையும் கொள்ளைகள் மிக மிகக் குறைந்திருப்பதையும் கலவரங்கள் மிக மிக குறைந்திருப்ப-தையும் பார்க்கிறார்கள். அந்த 1976–ம் ஆண்டில் ஏன் குறைந்திருக்கிறது என்று கேட்பார்கள் என்று எண்ணினேன். ஆனால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? மன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் தெரியும் எனக்குத் தெரியும்.

ரா. உமாநாத் (மார்க்சிஸ்ட்) : அந்த ஆண்டு போலீஸ் ரெவியூ நோட்டைப் படித்துப் பார்த்தால் அந்த ஆண்டில் குற்றங்கள் சில ஐடெம்களில்  அதிகமாக இருக்கின்றன.

எம்.ஜி.ஆர். : குற்றங்களை பிரித்துப் பார்க்கும் போது அது, குற்றமா, இல்லையா என்பது அந்த அந்த நேரத்திற்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டி இருக்கிறது. இத்தனை மணிக்கு வர வேண்டும் என்று சொல்லி வராமல் இருந்து வழக்கு போட்டால் அது குற்றம். இத்தனை மணிக்கு வரவேண்டும் என்று  சொல்லி ஒழுங்காக வந்து அன்றாட வேலை செய்து முடித்து, ஓ.டி. கேட்டதாக சொல்லி அவர் மீது வழக்கு போட்டால் அது குற்றம் அல்ல.

குற்றங்கள் அதிகமாக இருக்கின்ற்ன என்று சொல்கிறார்கள். எந்த பிரிவில் அதிகமாக குற்றங்கள் இருக்-கின்றன என்பதை பரிசீலித்து பார்த்தால், எந்தெந்த இடங்களில் குற்றங்கள் அதிகம் ஆகின்றன, எந்தெந்த இடங்கில் குற்றங்கள் குறைந்து வருகின்றன என்பதை பார்க்க முடியும்.

எதையோ ஆதாரமாக வைத்துக்கொண்டு பேசுவதாக கருத வேண்டாம். எங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை. ஆசையும் இல்லை. அப்படி அவசர காலச் சட்டத்தின் மூலமாக தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற வேண்டும், மக்கள் ஒழுங்காக பணியாற்றுவார்கள் என்று நினைத்து  இருப்-போமேயானால், அது நியாயமான எண்ணமும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் முடியாது. தவிர்க்க முடி-யாத நிலையில் அவசரச் சட்டம் கொண்டு வரும் அவசியம் ஏற்படுகிறது. 

நாங்கள் கூட ஒரு ஆர்டினன்ஸ் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக கொண்டு வர நினைத்தோம். எது எது அத்தியாவசியமானது என்கிற சில பகுதிகளைக் கொண்டு வந்து அந்த சட்டத்தை பயன்படுத்-தாமல் பேச்சுவார்த்தை மூலமாக தொழிலாளர்களுடனும், தொழிலாளர் சங்க தலைவர்களுடனும் சுமுக-மான முறையில் பேசி, இந்த சட்ட பேரவையில் கொண்டு வருவதற்கு முன்னால் அது காலாவதியாக கூடிய முறையில் இந்த அரசு நடந்தது என்றால் இந்த அரசை தொழிலாளர்களுக்கு விரோதமான அரசு என்று வெளியிலே  சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

இந்த அரசு போலீஸாரை வைத்துக்கொண்டு தொழிலாளர்களை பழி வாங்குகிறது என்று சொல்கி-றார்கள். மாணவர்கள் பிரச்னையை பற்றி இந்த தொடர் கூட்டத்தில் யாரும் பேசவில்லை. அதற்காக என் நன்றி. ஒரு வேளை முன்பு பேசியதை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். அடிப்பது, சுடுவது, கைது செய்வது, சிறைச்சாலைக்கு அனுப்புவது ஆகியவற்றில் எங்களுக்கு நிச்சயமாக உடன்பாடு இல்லை என்பதை அங்கத்தினர்களுக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். தொடர் இந்த இதழுடன் முற்றுப்பெறுகிறது