சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 55 – துரை கருணா

பதிவு செய்த நாள்

12
ஆகஸ்ட் 2016
22:54

சமரச தீர்வே சரியானது! 

1979–ம் ஆண்டு ஏப்ரல் 18–ம் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்ற காவல்துறை மான்ய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி:–

எம்.ஜி.ஆர் : காவல்துறை மானியத்தின்மீதும் தீயணைப்புத்துறை மானியத்தின்மீதும் கலந்துகொண்டு பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும்  பிரதிநிதிகளும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் நல்ல நல்ல கருத்துக்களை எடுத்துக்கூற முன்வந்திருக்கிறார்கள். நல்ல கருத்துக்கள் என்று சொல்லும்போது, இவ்வளவு நேரம் கூறியதை எல்லாம் நல்ல கருத்துக்கள் என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா? அப்படி-யானால் அவைகள் எல்லாம் உண்மைதானா என்ற கேள்வியும் உடன் தொடரும் என்பதும் எனக்கு தெரியாதது அல்ல. நல்ல நல்ல கருத்துக்கள் என்பதற்கு நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை பற்றி அவரவர்கள் கோணத்திலேயிருந்து பார்க்கும் போது, எப்படி எப்படி அவர்கள் உணர்கின்றார்களோ, அந்த வகையில் இங்கே கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

தொடக்கத்திலேயிருந்து ஓரளவிற்கு நான் குறித்துக்கொண்ட வகையில், கரியமாணிக்கம் அம்பலம்  தன் உள்ளத்தில் பட்டதை அப்படியே திட்டவட்டமாக, வெளியே சொல்லமுயன்றார்கள். அரசு எப்படி செயல்படுகிறதோ அதற்கேற்பத்தான் காவல்துறை அதிகாரிகள் எல்லாம் செயல்படுகின்றார்கள். ஆக-வே, அரசு தன்னுடைய முறையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டார்கள். இது நல்ல கருத்து என்று நான் நினைத்துக் கொள்வதற்கு காரணம், நாங்கள் இதுவரையில் அமைச்சர்க-ளாக இருக்கிற முறையில், அல்லது முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற நான் நடந்துகொள்கின்ற முறை சரியல்ல என்று இரண்டு மூன்று கருத்துக்களை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒன்று, காவல் துறையினருக்கு அதிக அதிகாரம் கொடுத்து விட்டீர்கள் என்கிற குற்றச்சாட்டு, இன்னொரு புறத்தில், அதிகாரிகள் செயல்பட முடியாவாறு தடுக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு, இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவர் மட்டும் வெளியிடவில்லை. இங்கே பேசிய பல்வேறு உறுப்பினர்களும் அதே குறையை சொன்னார்கள். இறுதியாக பேசிய ஜனதா கட்சி தலைவர்களிலே ஒருவரான ஜேம்ஸ் அவர்கள் கூட அதைப் போலவே பேசினார்கள்....

ராம. கரியமாணிக்கம் அம்பலம் :(காங்) நான் பேசும்பொழுது அதிகாரம் அதிகமாக கொடுத்து விட்-டார்களென்று சொல்லவில்லை அதிகாரம் அதிகமாக வேண்டுமென்றுதான் சொன்னேன்.

எம்.ஜி.ஆர் : நான் ஒரு விளக்கம் சொன்னால், பெரியவர் அதை தப்பாக நினைக்க மாட்டார் என்று கரு-துகின்றேன். ஏதோ ஒரு வழக்கில், வழக்கு மன்றத்திற்கு போக வேண்டிய நிலையிருக்கும் போது இரு தரப்பாரையும் கூப்பிட்டு, சமாதானமாக போங்கள் என்று ஒருவர் சொன்னதாக, இங்கே கூறப்பட்டு, அப்படியெல்லாம் அவர்கள் நடப்பது நியாயமா என்று எல்லாம் கேட்டார்கள். இது ஒருவேளை, அந்த அதிகாரியினுடைய நோக்கமாக இருந்திருக்கலாம். ஏன், எதற்காக சண்டை போட்டுக் கொண்டு வழக்-குமன்றத்திற்கு சென்று யாராவது ஒருவர் தோல்வி பெற்று யாருக்காவது ஒருவருக்கு தண்டனை கிடைக்கப்பெற்று, இன்னொருவர் தண்டனை பெறாமல் தப்பி விடக்கூடும்.

அப்படியானால் தோற்றவர்களுக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்கும். ஆகவே அந்த நிலைமை ஏற்ப-டாமல் இருசாராரும் ஒருமனதோடு சமாதானமாக போகலாம் என்ற எண்ணத்தில் அந்த அதிகாரிகள் அப்படிச் செய்தது, சரியல்ல என்று சொல்கிற நேரத்தில், இந்த அரசு அப்படிப்பட்டவர்களுக்கு அதிக-மாக அதிகாரம் கொடுத்துவிட்டது என்று குறை கூறினார்கள். நான் ஒன்றை பணிவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாட்டில் அமைதி காப்பது என்பது வெறும் சட்டத்தினால் மட்டும் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல என்று பன்முறை சொல்லியிருக்கிறேன். அதை பலரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதேப்-போல ஒரு சாராருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து சிறைக்கு அனுப்புவதினால் மட்டுமே எந்த பிரச்-னையும் தீர்ந்துவிட்டது என்று கருத முடியாது.

எனக்கு கிடைத்த ஒரு செய்தியை நான் இங்கே கூறியாக வேண்டும். உமாநாத் அவர்கள் குறிப்பிட்-டார்கள் என்று கருதுகிறேன். ஒருவர் கொலைக் குற்றவாளியாக கருதப்பட்டு காவலில் வைக்கப்பட்டி-ருந்தார். அதற்கு பிறகு அவர் வெளியேவந்த பிறகு அவர் கொலை செய்யப்பட்டார் என்று செய்தி வந்திருக்கிறது. எதுவாக இருந்தாலும்,  வெற்றி தோல்வி யாருக்கு என்று பார்ப்பதை விட்டு அமைதி-யான சூழ்நிலையில் பிரச்னைகளை தீர்ப்பதற்குத்தான் இந்த அரசு விரும்புகிறது.

இங்கே பல நண்பர்கள் அபிப்பிராயங்களை வெளியிடும் போது நீங்கள் துப்பாக்கியை நம்பிக்-கொண்டு இருக்காதீர்கள், தடியடி கொடுத்தெல்லாம் எதையும் தடுத்துவிட முடியும் என்று எண்ணி விடாதீர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டபோது, நான் எந்த கருத்தை வெளியிட்டேனோ அந்த அடிப்ப-டையில்தான் அவர்களும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளார்கள் என்று நம்புகிறேன்.

பேச்சின் மூலம் விவாதத்தின் மூலம் கருத்துக்களை எடுத்து வைத்து பகிர்ந்து கொள்வதன் மூலமே நல் எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு அதன் வாயிலாக சுமூகமாக உறவு ஏற்பட்டு, சண்டை சச்சரவுகள் தீரும், அது தான் நல்லதொரு முறையாக இருக்கும் என்ற கருத்து அதிலே உள்ளிட்டிருக்கிறது என்று கருதுகிறேன். அந்த வகையிலே இந்த அரசு கூடுமான வரையில் வழக்கு மன்றத்திற்கு சென்று அவர்கள் மீது வழக்குகள்போட்டு அவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை என்று பன்முறை சொல்லியிருக்கிறேன். இன்னொரு முறையும் மீண்டும் இன்றைய தினம் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

ஜேம்ஸ் இன்றைக்கு ஒரு பிரச்னையை இங்கே குறிப்பிட்டார். அவர் ஏன் அதைச் சொன்னார் என்று நான் எவ்வளவுதான் சிந்தித்து பார்த்தும் கூட பதில் கிடைக்க வில்லை. இருந்தாலும் எனக்கு தெரிந்த அளவில் ஒரு விளக்கம் சொல்ல நான் விரும்புகிறேன்.

பிரதம மந்திரி அவர்கள் வந்தபோது ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டார் என்றும் அந்த கூட்டத்தில் நானும் கலந்துக் கொண்டேன் என்றும், அப்படி கலந்துக்கொண்டு பேசிவிட்டு நான் வெளியே வந்த பிறகு அங்கே கொஞ்சம், குழப்பம் ஏற்பட்டு, மக்கள் எழுந்து செல்ல ஆரம்பித்தார்கள் என்றும், அதிலே முன்னதாகவே போலீசைக் கொண்டு தடுத்து நிறுத்தியிருக்கலாம். அப்படி ஏன் செய்ய-வில்லை என்றும் கேட்டார்கள்.

சில கருத்துக்களை குறிப்பிடும் போது கவனத்தோடு கூறவேண்டும். இந்த செய்தி மக்களுக்கு தெரிய வேண்டுமா? இந்தியப் பிரதமர் வந்திருக்கிற நேரத்தில் அவர் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பேசியவுடன், மக்கள் கலைந்து சென்றார்கள், எழுந்து சென்-றார்கள் என்றும், அப்படிச் செல்லும் போது அவர்களை ஏன் போலீசை கொண்டு தடுக்கவில்லை என்-றும், அவருடைய கட்சியை சேர்ந்த ஜேம்ஸ் வெளியிட்டு அவை ஏன் பத்திரிகையில் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறார், என்னால் அவருடைய நோக்கத்தை புரிந்துக் கொள்ள முடிய வில்லை.

போலீசை கொண்டு உட்கார வைத்து கூட்டத்தை நடத்தி பேச்சை முடிப்பது என்ற வழக்கம் இப்போது இல்லை. அந்த  நிகழ்ச்சிகளும் நடைமுறைகளும் 1971–ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு ஜனவரி 31–ம் தேதியோடு முடிவடைந்துவிட்டன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அதற்கு முன்னாலும் இல்லை, பின்னாலும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மப்டியில் போலீசை வைத்து அவர்களை உட்கார வைத்து, கூட்டத்தில் அதிகமாக மக்கள் இருப்பது போல் காட்டுவது, மக்கள் எழுந்து போகாதபடி சுற்றி போலீசை நிற்கவைத்து கூட்டத்தை முடிப்பது, இப்படியெல்லாம் நடந்து வந்ததை பார்த்திருக்கிறோம். அந்த நிலைமைக்கு பாரத பிரதமர் வந்து விட்டார் என்ற நிலைமையில் செய்தியை வெளியிடுவது மிக மிக வேதனையாக எனக்கிருக்கிறது. அதற்காக நான் மிக மிக வருத்தப்படுகிறேன். அங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

நமது கவர்னர் அவர்களும் இருந்தார்கள். முதலில் திருவள்ளுவர் சிலை அமைப்பு விழாவில் கால்-கோள்விழா முடிந்து திரும்புவதற்கு முன்னால் சிலர் எழுந்து நடமாடத் தொடங்கிய பிறகு முறை-யோடு நான் பேச வேண்டிய கட்டம் வந்ததும், ரயில்வே நிலையத்தில் ரயிலை ஓட விடுகின்ற அந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அமைத்து இருந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்-டபோது என் பேச்சில் நான் பகிரங்கமாக குறிப்பிட்டேன். என் பேச்சில் முடிவின்போது ஒரு கருத்-தினை வெளியிட்டேன்.

என் பேச்சு முடிந்த பிறகும் அந்த விழா இனிது முடிந்து, நாட்டு வணக்கப் பாடல் முடிகிற வரையில் யாரும் தயவு செய்து கூட்டத்தை விட்டு எழுந்து செல்வதோ அல்லது கூட்டத்தில் இருந்து எழுந்து நிற்-பதோ, அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பதோ, இவைகளெல்லாம் கூடாது.

விருந்தினர்களை மதிக்கிற வகையில் கன்னியாகுமரி மக்கள் எத்தகைய பண்புள்ளவர்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் ஒத்துழைப்பு தர வேண்டும், என்னை ஏமாற்றாதீர்கள் என்று கூறி அதற்கு பிறகு நான் உட்கார்ந்தேன் என்பதையும், அப்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் மொழி பெயர்ப்பு மூலம் அதை தெரிந்து கொண்டதன் விளைவாக பாராட்டினார்கள் என்பதையும், கவர்னர் பாராட்டினார் என்பதையும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஜேம்ஸ் அவர்களுக்கு யாரோ வேண்டுமென்றே சில தவறான தகவல்களை கொடுத்து, அவர்களும் அவருக்கு நண்பர்போல் இருந்து கொண்டு, பாரத பிரதமர் அவர்களை அவமானப்படுத்தும் செய்-தியை சொல்லி அவரை பழிவாங்கி இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

பாவம், ஏதோ அவர் அவருடைய கட்சியின் தனிப்பெரும் தலைவராக இருக்கிற, அதுவும் இந்திய துணைக் கண்டத்திலே இருக்கிற மாபெரும் பிரதம அமைச்சர் அவர்களை ஒரு சாதாரணப் பேச்சால் அவமானப்படுத்திவிட்டார் என்று வேதனையாக இருக்கிறது.

நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். ஆனால் பிரதம அமைச்சர் அவர்கள் எத்தகைய மகிழ்ச்சி-யோடு திரும்பினார்கள் என்பதும், அங்கே காவல் துறையினரும் ஒழுங்காக அமைதியோடும் பக்குவத்-தோடும் அந்த பகுதியில் பணியாற்றினார்கள் என்றும், பாராட்டிச் சென்றார்கள் என்பதையும் நான் இங்கே குறிப்பிட வேண்டியவனாக இருக்கிறேன்.

******