மறைந்த எம்எல்ஏவுக்கு சட்டசபையில் இரங்கல்

பதிவு செய்த நாள்

09
ஆகஸ்ட் 2016
02:47

சென்னை,

கடந்த 4ந்தேதி மறைந்த முன்னாள் எம்எல்ஏ ந.முத்துக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பாக சபாநாயகர் பேசுகையில்: கடந்த 4.8.2016 அன்று ந.முத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர் 1971 – 1976 மற்றும் 1996 – 2001 என இருமுறை சங்ககிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அனுபாத்தையும் இரங்கலையும் பேரவை சார்பாகவும், என் சார்பாக தெரிவித்து கொள்வதோடு, மறைந்த பெருந்தகைக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2 மணி துளி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு கேட்டு கொள்கிறேன். என்றார். இதனை தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அமைதி காத்தனர்.