ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 03–08–16

பதிவு செய்த நாள்

02
ஆகஸ்ட் 2016
22:08

(சென்ற வார தொடர்ச்சி...)

சில ஆண்­டு­க­ளுக்கு முன் மலை யாளத்­தில் என்டே மோகங்­கள் பூவ­ணிஞ்சு" என்று ஒரு படம் வெளி­வந்­தது. அதற்கு தட்­சி­ணா­மூர்த்தி என்­ப­வர் இசை­ய­மைத்­தி­ருந்­தார். பாடல்­கள் அனைத்­தும் சூப்­பர்­ஹிட். அதே படம் இசை­பா­டும் தென்­றல்" என்ற பெய­ரில் தமி­ழில் உரு­வா­ன­போது இளை­ய­ரா­ஜாவை இசை­ய­மைக்­கச் சொன்­னார்­கள். தட்­சி­ணா­மூர்த்­தி­யின் இசை­ய­மைப்­பில் மிகுந்த மதிப்­புக் கொண்­டி­ருந்த இளை­ய­ராஜா, தட்­சி­ணா­மூர்த்­தி­யின் இசை­யையே வைத்­துக்­கொள்­ள­லாமே என்று கூறி­னார். கேட்­க­வில்லை. சரி என்று ஒப்­புக்­கொண்ட இளை­ய­ராஜா தன் பாணி­யில் எல்­லாப் பாடல்­க­ளுக்­கும் இசை­ய­மைத்­தார்.

(தொட­ரும்)

அவருக்குள் ஆயிரம் டியூன்கள் உருவாகிக் கொண்டிருக்கும்– பாசில்

தமி­ழில், இளை­ய­ராஜா என்ற ஆளு­மைக்­காக மட்­டுமே பட­மெ­டுத்த இயக்­கு­நர்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டால், அதில் பாசில் பெயர் நிச்­ச­யம் இருக்­கும். இளை­ய­ரா­ஜா­வின் இசை­யி­ய­லுக்­கா­கவே தமி­ழி­லும் தனது மலை­யா­ளப் படைப்­பு­களை ரீமேக் செய்­த­வர். ‘நோக்­காதே துாரத்து கண்­ணும் நட்டு’ என்று மலை­யா­ளத்­தில் இவர் கொடுத்த மெகா ஹிட் படம், தமி­ழில் ‘பூவே பூச்­சூ­டவா’ என்று ரீமேக் செய்­யப்­பட்டு, வெளி­யாக ஒரு வரு­டம் காத்­தி­ருந்­தது. கார­ணம் என்ன…? ராஜா­வின் இசை மீது அப்­படி என்ன மோகம்? – பழைய நினை­வு­க­ளில் மூழ்­கி­ய­படி பேச ஆரம்­பிக்­கி­றார் பாசில். “கல்­லூரி நாட்­க­ளில் நான், திலீப் குமார் மற்­றும் சிவா­ஜி­யின் மிகப் பெரிய ரசி­கன். மேல்­ப­டிப்பு படிக்­கும்­போது எங்­கள் ஊர் டீக்­க­டை­க­ளின் வழி­யா­கத்­தான் இளை­ய­ராஜா அறி­மு­கம். கல்­லூரி முடிந்த நாட்­க­ளில் ‘செந்­தூ­ரப்­பூவே’ பாடலை கேட்­டுக் கிறங்­கி­யி­ருந்­தோம். 1985ல் ‘நோக்­காதே துாரத்து கண்­ணும் நட்டு’ படத்தை நான் முடித்­தி­ருந்­தேன். அந்­தப் படத்தை தமி­ழுக்கு கொண்டு போகும் ஆவல் வந்­தது. ஆனால், அப்­போது இளை­ய­ராஜா பயங்­கர பிஸி. கிட்­டத்­தட்ட ஒரு வரு­டம் அவ­ருக்­கா­கக் காத்­தி­ருந்­தோம். அதன் பல­னாக, ‘பூவே பூச்­சூ­டவா….. எந்­தன் நெஞ்­சில்…’ என்ற அரு­மை­யான பாடல் கிடைத்­தது.

மலை­யாள வெர்­ஷ­னில் இருக்­கும் பாட­லைக் கேட்ட இளை­ய­ராஜா, ‘குரல் யாரு­டை­யது…?’ என்­றார். ‘சித்ரா என்­கிற ஒரு­வர் பாடி­யி­ருக்­காங்க’ என்­றேன். ‘அவங்­களே தமி­ழி­லும் பாடட்­டும்’ என்­றார். அதே நாளி­லேயே கம்­போ­ஸிங்­கில் உட்­கார்ந்­தோம். ஆனால் எனக்­கொரு சின்ன பயம். 'பெரிய இசை­ய­மைப்­பா­ளர். அவ­ரு­டைய டியூன் படத்­துக்­குச் சரி­யா­கப் பொருந்­த­வில்லை என்­றால் என்ன செய்­வது?' என்று யோசித்­தேன். பொருத்தி வைத்த மாதிரி டியூன்­க­ளைக் கொடுத்­தார். பாடல்­க­ளும் வந்­தன. ஸ்டூடி­யோ­வில் இருந்த மற்ற இசை­யா­ளர்­க­ளுக்­கும் பாடல்­கள் புடிச்­சுப் போச்சு. எல்­லோ­ரும் கைத்­தட்­டி­னாங்க. 'இந்­தக் கைத்­தட்­டல் எனக்கா… சித்­ரா­வுக்கா?' என இளை­ய­ராஜா கேட்­டார். அவ­ருக்­குத்­தான் என எல்­லோ­ரும் சொன்­னாங்க. ராஜா இடை­ம­றித்து, ‘எனக்­கும் இல்லை, சித்­ரா­வுக்­கும் இல்லை, இந்த கைத்­தட்­டல் அனைத்­தும் எம்.எஸ்.வி. அண்­ணா­வுக்­குத்­தான்’ என்­றார். அப்­போது அவர் ‘பாச­ம­லர்’ பட­மும், ‘மலர்ந்­தும் மல­ராத….’ பாட­லும் பாசத்தை வெளிப்­ப­டுத்­திய மாதிரி எந்த பட­மும், பாட­லும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க முடி­யாது. இது மாதி­ரி­யான இசைக் கோர்­வை­க­ளுக்கு எம்.எஸ்.வி. அண்­ணா­தான் எங்­க­ளுக்கு முன்­னோடி’ என்­றார். 'பூவே பூச்­சூ­டவா…' பாட­லில் கூட, ‘மலர்ந்­தும் மல­ராத….’ பாட­லின் சாயல் கொஞ்­சம் இருக்­கும். பீக்­கில் இருந்த இளை­ய­ராஜா நினைத்­தி­ருந்­தால், ‘எம்.எஸ்.வி. தான் தனக்கு இன்ஸ்­பி­ரே­ஷன் என்­பதை சுட்­டிக்­காட்­டா­மல் விட்­டி­ருக்­க­லாம். ஆனால், பல பேர் முன்­னி­லை­யில் எம்.எஸ்.வி.க்கு கிளாப்ஸ் செய்­யச் சொன்­னார்.

எனக்கு என்ன அதிர்ஷ்­டமோ தெரி­யலே ‘பழ­மு­திர்ச்­சோலை எனக்­கா­கத்­தான்….’, ‘கங்­கைக்­கரை மன்­ன­னடி….’, ‘என்­னைத் தாலாட்ட வரு­வாளா…..’, ‘ஆகாய வெண்­ணி­லாவே…’ என ராஜா கொடுத்த பல ஹிட் பாடல்­கள் என் படத்­தில் அமைந்­தன. எல்­லோ­ரும், ‘இளை­ய­ராஜா ஆயி­ரம் படங்­களை எட்­டி­விட்­டார்’ என்று சொல்­கி­றார்­கள். ஆனால், எப்­ப­வுமே அவ­ருக்­குள் ஆயி­ரம் டியூன்­கள் உரு­வா­கிக்­கொண்­டி­ருக்­கும்; ஆயி­ரத்தை அவர் எப்­போதோ எட்­டி­விட்­டார்” என்று  சொல்லி முடிக்­கும் போது, பாசி­லின் பார்­வையை மறைக்­கும் அள­வுக்கு கண்­க­ளில் கோர்த்­தி­ருந்­தது நீர்.