டான்பாஸ்கோ தொழில் நுட்ப வளாகத்தில் ஆய்வுகூடம் திறப்பு

பதிவு செய்த நாள்

18
ஜூலை 2016
01:37

உலோகங்கள், பிளாஸ்டிக்குகளை பரிசோதனை செய்ய ஏழை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க டான்பாஸ்கோ தொழில்நுட்ப வளாகத்தில் ஆய்வுக்கூடத்துடன் கூடிய பயிற்சியகத்தை பன்னாட்டு நிறுவனமான ஜிவிக் ரோயல் திறந்துள்ளது.

தர பரிசோதனை கருவிகளை தயாரிக்கம் சர்வதேச நிறுவனம் ஜிவிக் ரோயல் குழுமம் சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் டான் பாஸ்கோ தொழில்நுட்ப வளாகத்தில் நவீன பரிசோதனைக் கூடத்தை நிறுவியுள்ளது. இந்த பரிசோதனை மையத்தில் ஏழை மாணவர்களுக்கு பொருள் தர பரிசோதனையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. உலோகங்களையும், பிளாஸ்டிக்குகளையும் பரிசோதிக்கும் ஜிவிக் மெஷின் ஆப்ரேட்டராக மாணவர்களை உருவாக்குவதன் மூலம் நல்லதொரு வேலையை பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வழி வகுக்கும்.