சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 51 – துரை கருணா

பதிவு செய்த நாள்

15
ஜூலை 2016
20:08

அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்!

1979ம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் தமி­ழக சட்­ட­ச­பை­யில் ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது நடை­பெற்ற விவா­தங்­க­ளுக்கு பதி­ல­ளித்து முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். பேசி­யது :–

எம்.ஜி.ஆர் : உமா­நாத் தனது கருத்தை இங்கே குறிப்­பிட்ட பிறகு ஒன்றை நான் சொல்­லி­யாக வேண்­டும்.வன்­மு­றை­யிலே ஈடு­ப­டு­ப­வர்­களை நிச்­ச­ய­மாக வழக்­கிலே இருந்து விடு­விக்க முடி­யாது என்­றா­லும், அவர்­கள் மீது இருக்­கின்ற வழக்­கு­களை வாபஸ் வாங்க முடி­யாது என்­றா­லும் அப்­ப­டிப்­பட்ட கொள்­கை­யினை மாற்­றிக்­கொள்­வது இய­லாது என்­றா­லும் அவர் சொன்ன பிறகு ஒரு சில பிரச்­னை­க­ளைப்­பற்றி நான் மீண்­டும் பரி­சீ­லனை செய்­வேன் என்­ப­தை­யும் அதைப்­பற்றி இந்த அரசு விரை­விலே நல்ல முடிவை சொல்­வ­தற்கு முயற்­சிக்­கும் என்­ப­தை­யும் இந்த அவை­யிலே நான் குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.

யார் மீதும் தனிப்­பட்ட முறை­யில் விருப்பு வெறுப்பு காட்ட வேண்­டும் என்­கின்ற வகை­யிலோ அல்­லது ஏதா­வது ஒரு பழி சுமத்த வேண்­டும் என்­கின்ற வகை­யிலோ நட­வ­டிக்­கை­கள் எடுக்­கின்ற எண்­ணம் இந்த அர­சுக்கு இல்லை என்­பதை மட்­டும் தய­வு­செய்து உமா­நாத் நம்­பு­வார்­கள் என்­ப­தில் எனக்கு சந்­தே­கம் இல்லை.  அடுத்து ஆளு­நர் உரை­யில், இது­வ­ரை­யில் நீங்­கள் என்ன செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பது பற்றி சொல்­லப்­ப­ட­வில்லை என்று மிக தெளி­வா­க­வும் அழுத்­தம் திருத்­த­மா­க­வும், மனதை புண்­ப­டுத்­தாத வகை­யி­லும் பேரா­சி­ரி­யர் (அன்­ப­ழ­கன்) குறிப்­பிட்­டதை இங்கே நான் சொல்­லிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். 

இந்த ஆட்­சி­யிலே ஒரு லட்­சம் பேர்­க­ளுக்கு வேலை கொடுக்­கப்­ப­டும் என்­றீர்­களே, இப்­போது 11 ஆயி­ரம் பேருக்­குத்­தான் கொடுக்­கப்­ப­டும் என்று சொல்­கி­றீர்­களே, ஏன் இந்த வேறு­பாடு, முன் கூட்­டியே திட்­டம் போட்­டு­விட்டு இதை சொல்­லி­யி­ருக்­கக்­கூ­டாதா என்று அவர்­கள் கேட்­டார்­கள், இது நியா­ய­மான ஒரு கேள்­வி­தான், இதற்கு பதில் சொல்­லித்­தான் ஆக­வேண்­டும். எல்­லா­வற்­றை­யும் ஆளு­நர் உரை­யிலே சொல்ல வேண்­டும் என்­றால் ஒரு நீண்ட பிர­சங்­கம் போல் ஆகி­வி­டும் என்­ப­தால் சுருக்­க­மாக சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை சொல்­லிக்­கொள்­கி­றேன். இருப்­பி­னும் நான் அவை­க­ளில் ஒரு சில­வற்றை இங்கே குறிப்­பிட விரும்­பு­கி­றேன். ஆளு­நர் உரை­யிலே அந்த திட்­டத்­தின் மூலம் ஒரு லட்­சம் பேருக்கு வேலை வாய்ப்பு உண்­டாக்­கப்­ப­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது. என்­னி­டம் இருக்­கின்ற புள்ளி விவ­ரங்­க­ளின்­படி முதல் 9 மாதத்­திலே அதா­வது 31.12.1978 வரை இந்த திட்­டத்­தின் மூலம் 1 லட்­சத்து 30 ஆயி­ரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்­கப்­பட்டு உள்­ளது என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். 

பட்டு வளர்ப்பு திட்­டத்­தின் மூலம் 29 ஆயி­ரம் பேர்­க­ளுக்­கும், கதர் கிரா­மத் தொழில் வாரி­யத்­தின் மூலம் 49 ஆயி­ரம் பேர்­க­ளுக்­கும், சிறு­தொ­ழில் கூட்­டு­றவு சங்­கங்­கள் அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் மூலம் 58 ஆயி­ரம் பேர்­க­ளுக்­கும் ஆக 1 இலட்­சத்து 30 ஆயி­ரம் பேர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை சொல்­லும் போது நமது பேரா­சி­ரி­யர்  உண்­மை­யி­லேயே மகிழ்ச்சி கொள்­வார்­கள் என்று நான் நம்­பு­கி­றேன். 

நான் இன்­னொன்­றை­யும் சொல்ல வேண்டி இருக்­கி­றது. சில நேரங்­க­ளில் சில கேள்­வி­கள் எழும்­பும்­போ­து­தான் உண்­மை­கள் வெளி­வ­ரு­கின்­றன. ஆகவே இப்­படி அனு­ப­வம்­மிக்­க­வர்­கள் இப்­ப­டிப்­பட்ட கருத்­துக்­களை இங்கே எடுத்து வைப்­பது இந்த அர­சுக்­கும் இந்த அவைக்­கும் நல்­லது என்­பதை நான் நிறை­வோடு சொல்லி அவர்­களை பாராட்­டக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

மது­வி­லக்­கைப்­பற்றி சொல்­லும்­போது, நல்ல பண­வ­ச­தி­யுள்­ள­வர்­கள் தப்­பித்­துக்­கொள்­கி­றார்­கள். ஏழை­கள் தான் சிக்­கிக்­கொள்­கி­றார்­கள் என்­பதை மாமன்ற உறுப்­பி­னர்­கள் எடுத்­துச் சொல்­லும்­போது, ஒன்றை புரிந்து கொள்ள வேண்­டும், இப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளை­யும் தண்­ட­னைக்கு உள்­ளாக்­கும் வகை­யில் ஏதா­வது சட்­டத்தை கொண்டு வந்­தால், அல்­லது எப்­ப­டிப்­பட்ட முறை­கள் இருந்­தால், இதை தடுக்க பயன்­ப­டும் என்­பதை பற்­றி­யும் நான் சிந்­தித்து கொண்­டி­ருக்­கி­றேன். நான் உண்­மை­யி­லேயே இதைப்­பற்றி தீவி­ர­மாக சிந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன் என்­ப­தை­யும்  இங்கு வெளி­யிட விரும்­பு­கி­றேன்.

சில மரி­யா­தைக்­கு­ரிய மாமன்ற உறுப்­பி­னர்­கள், குறிப்­பாக உறுப்­பி­னர் சங்­க­ரய்யா சொன்­னார் என்று கரு­து­கி­றேன். ஒரு கோடி பேர்­கள் குடிக்­கி­றார்­கள் என்று சொன்­னார்­கள். (குறுக்­கீடு – பேரா­சி­ரி­யர்) மன்­னிக்க வேண்­டும், பேரா­சி­ரி­யர் சொன்­னார். இதிலே 50 லட்­சம் பேர்­கள் பழக்­கப்­பட்­ட­வர்­கள் என்­றெல்­லாம் கூறி­னார். நான் அவர்­க­ளுக்கு சொல்­வ­தெல்­லாம் அவர்­கள் எப்­படி நம்பி சொல்­லு­கின்­றார்­களோ, அவர்­களை நான் நம்­பு­கி­றேன். அவர்­கள் இந்த குறை­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­வர் என்­ப­திலே எனக்கு நிச்­ச­ய­மாக நம்­பிக்கை உண்டு. நான் அவர்­க­ளுக்கு சொல்­வது, ஒரு கோடி பேர்­களோ அல்­லது எத்­த­னை­பேர்­களோ என்று கணக்­கி­டு­வ­தற்கு முன், இதை நாம் கண்டு கொண்­டால் நல்­ல­தென்று நம்­பி­னேன். அந்த வகை­யில் அனைத்­துக் கட்சி தலை­வர்­க­ளும் இதிலே ஒருங்­கி­ணைந்து இது செயல்­ப­டு­வ­தற்கு வெற்­றி­க­ர­மாக உத­வி­னால், நாம் சட்­டத்தை அதற்­கேற்ப அமைத்து, அனைத்து கட்­சி­க­ளும் ஒன்­று­சேர்ந்து உழைத்­தால், நிச்­ச­ய­மாக அண்­ணா­வின் கொள்கை, நமது அர­சின் கொள்கை, முன்­பி­ருந்த அர­சின் கொள்கை வெற்றி பெறும் என்­ப­திலே சிறி­தும் சந்­தே­க­மில்லை என்­பதை சொல்­லிக் கொள்ள விரும்­பு­கி­றேன்.

உமா­நாத் (மார்க்­சிஸ்ட் கம்யூ): மது­வி­லக்கு சம்­பந்­த­மாக புது சட்­டம் சம்­பந்­த­மாக கனம் முதல் அமைச்­சர் குறிப்­பி­டும்­போது, என்ன நடக்­கி­ற­தென்­றால், இதற்கு முன்­னாலே இருக்­கிற சட்­டத்­திலே மினி­மம் தண்­டனை 3 மாதங்­கள் என்று சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. அப்­படி குறைந்த பட்­சம் 3 மாதங்­கள் என்று இருந்­தும்­கூட, பர­வ­லாக கோர்ட்­டு­க­ளில் 1 மாதம் தான் போடு­கி­றார்­கள். அதை­யும் மீறி இந்த மாதிரி 6 மாதங்­கள் ஒரு வரு­ஷம் என்று போடு­வது எதற்­காக?

எம்.ஜி.ஆர்: அதற்­கு­தான் உங்­கள் யோச­னையை, அனு­ப­வத்தை ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில், இது­பற்றி திருத்­தங்­கள் வரும்­போது அவை­களை பயன்­ப­டுத்­திக்­கொள்ள இருக்­கி­றோம். முன்­னாலே இருந்த சட்­டத்­தில் ஒரு விதி இருந்­தும், பழக்­கத்­தின் கார­ண­மாக, அனு­ம­திக்­கப்­பட்­ட­தன் கார­ண­மாக இப்­படி விட்­டு­வி­டு­கி­றார்­கள், ஆகவே, இந்த நிலைமை ஏற்­பட்டு விடு­கி­றது. அதை மாற்றி அமைக்க வேண்­டும். உங்­கள் எண்­ணத்தை சரி­வர பயன்­ப­டுத்தி, உங்­கள் யோச­னை­க­ளை­யும் ஏற்று, சரி­யாக இந்த சட்­டத்தை உரு­வாக்­கி­னால், நமது அனை­வ­ரு­டைய நல்ல நோக்­கம் நிறை­வே­றும் என்ற நம்­பிக்கை எனக்­கி­ருக்­கி­றது.

மறைந்த ராஜாஜி இருந்த காலத்­தில் இருந்து, இது­வரை எப்­ப­டி­யெல்­லாம் இது நடை­பெற்று வந்­தது, அது மீறப்­பட்டு எப்­ப­டி­யெல்­லாம் இது அதி­க­மாகி இருக்­கின்­றது என்­பதை சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். 

அந்த கருத்­துக்­களை நான் கவ­னித்­த­போது, எனக்கு தெரிந்­த­தெல்­லாம் குடிப்­ப­வர்­கள் அதி­க­மாகி விட்­டார்­கள் என்­ப­தை­விட, குடிப்­ப­வர்­க­ளு­டைய எண்­ணிக்கை வெளி­யிலே அதி­கம் தெரிய ஆரம்­பித்து விட்­டது என்­பதை சொல்ல விரும்­பு­கி­றேன். அப்­ப­டியே அதி­க­மா­கி­யி­ருந்­தா­லும், சட்­டம் வந்த பிறகு, தெரு­விலே சண்டை சச்­ச­ர­வு­கள், குழப்­பங்­கள் குறைந்­தி­ருக்­கி­றது.

சில இடங்­க­ளில் பண வசதி உள்­ள­வர்­கள், ஒரு கிரா­மத்­திலே தங்­க­ளு­டைய சொந்த அரசு போல் நினைக்­கி­ற­வர்­கள், இந்த தேதி­யில், இந்த கிழ­மை­யில் வந்து சாரா­யத்தை காய்ச்சி கொள்­ளுங்­கள் என்று சொல்­கின்ற அள­வுக்­குக்­கூட, செயல்­ப­டு­கின்­றார்­கள் என்ற செய்தி வரு­கி­றது. அவர்­கள் சட்­டத்­திலே இருந்து, தண்­ட­னை­யிலே இருந்து தப்­பித்­துக் கொள்­ளு­கி­றார்­கள் என்ற ஒரு நிலை­மையை இனி உரு­வாக்க முடி­யாது என்­பதை நான் இங்கே சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்.

மு. அரங்­க­நா­தன் (திமுக) : இந்த புதிய சட்­டம் வரு­வ­தற்கு இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னால், யார் யார் இதிலே ஈடு­பட்டு சாரா­யம் காய்ச்­சு­கி­றார்­கள் என்ற பட்­டி­யல் என்­னி­டம் இருக்­கி­றது. எனக்கு தெரி­யும், அதை நான் வெளி­யிட போகி­றேன் என்று முத­ல­மைச்­சர் சொன்­னார். ஆனால், இது­வ­ரை­யிலே அந்த பட்­டி­யல் வெளி­யி­ட­வில்லை. புதிய சட்­டம் வந்த பிறகு, அந்த பட்­டி­யல் காவல் துறைக்கு அனுப்­பப்­பட்­டதா, அவர்­கள் என்ன நட­வ­டிக்கை எடுத்­தார்­கள் என்­பதை அன்பு கூர்ந்து தெரி­விக்க வேண்­டு­கி­றேன்.

எம்.ஜி.ஆர் : உறுப்­பி­னர் அரங்­க­நா­தன் கேள்வி நியா­ய­மா­னது. அந்த பட்­டி­யலை நான் கொடுக்­கா­மல் இல்லை, ஒரு சில­ரி­டம் கொடுத்­தேன். அந்த பட்­டி­யலை நான் கொடுத்த பிறகு  அந்த அதி­கா­ரி­கள் அங்கு செல்­வ­தற்கு  முன்­பா­கவே அவர்­க­ளுக்கு செய்தி தெரிந்­து­விட்­டது. ஆக­வே­தான் அதை மேலும் வெளிப்­ப­டை­யாக சொல்­ல­வில்லை. ஆகவே, அவர்­களை கண்­கா­ணிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளை­யும், உள்­ள­டக்கி சட்­டம் உரு­வாக்­கப்­பட வேண்­டும். அது வந்­தால், அந்த நிலை­மை­கள் மாற்­றப்­ப­டும்.

முன்­னாலே சொல்­வார்­களே மாமூல் பேர்­வழி என்று அப்­ப­டிப்­பட்ட ஒரு சில­ரும் இன்­ன­மும் இருக்­கி­றார்­கள். பத­வி­யி­லும் இருக்­கி­றார்­கள், பக்­க­ப­ல­மா­க­வும் இருக்­கி­றார்­கள். இவர்­களை எல்­லாம் நீக்­கு­வ­தற்கு உரிய வகை­யில் சட்­டம் உரு­வாக்­கப்­பட வேண்­டும். 

மது விலக்கு கொள்கை மக்­க­ளுக்கு தேவை என்று நம்­பு­கிற நாம், இவற்­றை­யெல்­லாம் உள­மார ஏற்­றுக்­கொள்­கிற நாம் ஒன்­று­பட்டு செய­லாற்ற வேண்­டும், இப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் அதிலே குற்­றம் புரிய தைரி­யம் இன்றி ஒதுங்­கு­வ­தற்கு நிச்­ச­ய­மாக சட்­டம் வந்­தால் – அவர்­கள் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­ப­தை­விட அவர்­கள் ஒதுங்­கி­வி­டு­வார்­கள் என்று சொல்ல விரும்­பு­கி­றேன். இன்று அத்­த­கைய சட்­டம் இல்லை என்­ப­தால் அவர்­கள் துணிந்­தி­ருக்­கி­றார்­கள். சட்­டம் அவர்­க­ளை­யும் குற்­ற­வா­ளி­யாக்­கும் என்று இருந்­தால் நிச்­ச­ய­மாக துணிந்து இப்­ப­டிப்­பட்ட காரி­யத்­தில் இறங்­க­மாட்­டார்­கள். அப்­ப­டிப்­பட்ட சட்­டத்தை கொண்­டு­வந்து உங்­க­ளு­டைய திருத்­தங்­கள், யோச­னை­கள் ஆகி­ய­வற்­றை­யெல்­லாம் சேர்த்து நல்ல முறை­யில் செயல்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யில் அனைத்து கட்சி தலை­வர்­க­ளோ­டும் தொடர்பு கொண்டு செயல்­ப­டுத்த கூடிய நிலை­மையை உரு­வாக்­கு­வோம் என்­பதை சொல்­லிக்­கொள்ள விழை­கி­றேன்.

– தொட­ரும்