ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 13–7–16

பதிவு செய்த நாள்

12
ஜூலை 2016
22:08

பொக்கிஷம்!

(சென்ற வார தொடர்ச்சி...)

சாகர சங்­க­மம் (தெலுங்கு) - 1983

சிந்து பைரவி ( தமிழ்) 1985

ருத்ர வீணா (தெலுங்கு) 1988

தமி­ழக அர­சின் விரு­தை­யும் மூன்று முறை பெற்­றி­ருக்­கி­றார்.

எக்கோ ரிக்­கார்­டிங் என்ற நிறு­வ­னத்தை அமைத்து கேஸட் தயா­ரிப்பு மற்­றும் விநி­யோ­கப் பொறுப்­பை­யும் கவ­னித்து வரு­கி­றார்.

தன் சகோ­த­ரர் பாஸ்­கர் மூலம் பாவ­லர் பிர­தர்ஸ் பட­நி­று­வ­னத்­தை­யும் தொடங்கி திரைப்­ப­டங்­க­ளை­யும் தயா­ரித்து வரு­கி­றார். கோழி கூவுது, கொக்­க­ரக்கோ, கீதாஞ்­சலி, ஆனந்­தக்­கும்மி, ராஜா­தி­ராஜா போன்ற படங்­கள் இளை­ய­ராஜா குடும்­பத்தா ­ரால் தயா­ரிக்­கப்­பட்ட படங்­க­ளா­கும். தன் குரு­நா­த­ரான இசை­ய­மைப்­பா­ளர் ஜி.கே. வெங்­க­டே­ஷீக்­கா­கத் தாமே முன்­னின்று ‘நினை வே ஒரு சங்­கீ­தம்’ என்ற படத்­தை­யும் தயா­ரித்­துக் கொடுத்­தார்.

1976ம் ஆண்­டில் திரை­யு­ல­கில் பிர­வே­சித்த போதே இளை­ய­ராஜா தனி மனி­த­ராக நுழைய­ வில்லை. கங்கை அம­ரன், பாஸ்­கர் என்ற சகோ­த­ரர்­க­ளோடு சேர்ந்து ஒரு நிறு­வ­னமா ­கத்­தான் நுழைந்­தார். அவர் வளர வளர அந்த நிறு­வ­ன­மும் வளர்ந்து பல்­கிப்­பெ­ரு­கி­யுள்­ளது.

அடுத்­த­வே­ளைச்­சாப்­பாட்­டுக்கு வழி­யில்­லையே என்று ஏங்­கிய காலத்­தி­லும், ‘நான் ஓர் இசை­ய­மைப்­பா­ள­னாக மாறியே தீரு­வேன்’ என்ற உறுதி அவ­ரி­டம் இருந்­தது. அத­னால் தான் இன்று அவரே ஒரு பெரிய நிறு­வ­ன­மாக வளர்ந்­தி­ருக்­கி­றார். அவரை நம்பி இன்று பல குடும்­பங்­கள் பிழைத்து வரு­கின்­றன.

எதி­லும் பற்­றற்ற ஒரு துறவி போல அவர் வாழ்ந்­தா­லும்,  தன்னை நம்­பிய குடும்­பங்­கள் நன்­றாக வாழ வேண்­டும் என்­ப­தற்­கா­கவே அவர் பல நிறு­வ­னங்­க­ளைத் தோற்­று­வித்து நடத்தி வரு­கி­றார்.

ராஜா பெற்ற ரோஜாக்­கள்.

இளை­ய­ராஜா பெற்ற ரோஜாக்­கள்  மூன்று பேர். இரண்டு பிள்­ளை­கள், ஒரு பெண். மூத்­த­வன் பெயர் கார்த்­திக் என்ற கார்த்­தி­கே­யன். அடுத்­தது மகள் பவ­தா­ரிணி. மூன்­றா­வது கடைக்­குட்டி மகன்­யு­வன். கார்த்­திக்­குக்­கும், யுவ­னுக்­கும் இசை என்­றால் உயிர். பவ­தா­ரி­ணிக்­கும் வீணை­யும், பியா­னோ­வும் நன்­றாக வாசிக்­கத் தெரி­யும். கார்த்­திக் பியானோ, வய­லின் வீணை ஆகி­ய­வற்­றைப் பிர­மா­த­மாக வாசிப்­பான். பியானோ வாசிப்­பில் திய­ரி­யில் நான்கு கிரே­டும், பிராக்­டி­க­லில் ஏழு கிரே­டும் முடித்­தி­ருக்­கி­றான். தன் மக­னின் இசை­யார்­வத்தை இளை­ய­ராஜா மிக­வும் உற்­சா­கப்­ப­டுத்தி வரு­கி­றார். பிளஸ் டூ முடித்து விட்டு நியூ­யார்க்­கி­லுள்ள பெர்க்லி மியூ­சிக் கல்­லூ­ரி­யில் சேர வேண்­டும் என்­பது கார்த்­திக்­கின் விருப்­ப­மாம். அப்பா இளை­ய­ரா­ஜா­வைப் போல முழுக்க முழுக்க சினி­மா­வில் ஈடு­பட அவன் விரும்ப ­வில்­லை­யாம். மேல்­நாட்டு இசை­ய­மைப்­பா­ளர்­க­ளைப்­போல நிறைய மியூ­சி­கல் ஆல்­பங்­க­ளைத் தயா­ரித்து விநி­யோ­கிப்­பது தான் அவ­னது இலட்­சி­ய­மாம்.

கார்த்­திக்­கின் 11 வயது தம்பி யுவ­னும் வய­லி­னைக் கையி­லெ­டுத்­தால் உல­கத்­தையே மறந்து விடும் அள­வுக்கு இசைப்­பித்­துப் பிடித்­த­வன் தான். அவ­னுக்­குத் தபலா வாசிக்­க­வும் தெரி­யும்.  

(தொடரும்)

நீள(ல) வானத்­துல ஒரே ஒரு சூரி­யன்; ஒரே ஒரு சந்­தி­ரன். அது போல, இசை வானத்­துல ஒரே ஒரு இசை­ஞா­னி­தான். அவ­ரு­டைய இடம், அவ­ருக்கு மட்­டுமே. வேற யாரும் அந்த இடத்­தைத் தொடக்­கூட முடி­யாது, பூர்த்தி செய்­ய­வும் முடி­யாது. என்­னைப் பொறுத்­த­வரை, இசை­ய­மைப்­பா­ளர் என்­பதை தாண்டி எங்க குடும்­பத்­துல ஒருத்­தர் இளை­ய­ராஜா. நான் பாடு­வ­தற்கு, பல அற்­பு­த­மான பாடல்­க­ளைக் கொடுத்­த­வர். ‘நான் போட்ட சவால்’ படத்­தில்  'நெஞ்சே உன் ஆசை என்ன…' என்ற பாடல் மூலம் ரஜினி படத்­தில் பாட வாய்ப்­புக் கொடுத்­தார். அதே மாதிரி, ‘நாய­கன்’ படத்­தில் ‘அந்­தி­மழை மேகம்… தங்­க­மழை தூவும்…’ என்ற பாடல் மூலம், கமல் படத்­தில் பாட வாய்ப்­ப­ளித்­தார். இளை­ய­ராஜா இசை­யில் நான் பாடிய பாடல்­கள் எல்­லாமே சூப்­பர் ஹிட். தமிழ் சினி­மா­வுக்­குக் கிடைத்த ஒரு பொக்­கி­ஷம் இளை­ய­ராஜா.

-பாட­கர். டி.எல். மக­ரா­ஜன்