இந்தியாவில் களம் இறங்கும் ஆட்டோ இங்க்ரெஸ் நிறுவனம்

பதிவு செய்த நாள்

12
ஜூலை 2016
02:46

 சென்னை

தானியங்கி கதவுகள் வடிவமைப்பு, தயாரிப்பு, விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆட்டோ இங்க்ரெஸ் ஆட்டோமேட்டிக் டோர் நிறுவனம் சென்னையில் தங்களது முதல் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை தொடங்குகிறது. இந்த தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் உள்ள சிட்கோ தொழிற்ப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தத்தொழிற்சாலை, தொடக்கத்தில் இந்தியா குடியிருப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையினருக்கான நகரும்,. இயஹ்கும், சுழலும், டெலஸ்கோபிக். ஹெர்மடிக் கதவுகள் மற்றும் வாசல் கதவு சாதனங்கலை ஒருங்கிணைத்தல் மற்றும் சந்தைபடுத்துதல் போன்ற சேவைகளில் ஈடுபடும்.

இந்த தொழிற்சாலை தொடக்கத்தில் ஒரு ஷிப்ட்டில் நாள் ஒன்றிற்கு 12 முதல் 15 யுனிட்டுகள் தயாரித்து, 4000 யுனிட்டுகள் ஆண்டு உற்பத்தியுடன் செயல்படும். இதன் வாயிலாக 50 முதல் 80 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.