மேற்கு வங்காளத்தில் ரயில் தடம்புரண்டது 9 பேர் சாவு 45 பேர் படுகாயம்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2022 00:06


கொல்கத்தா. ஜனவரி 13,

பிகானீர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் வியாழன் அன்று மாலை 5 மணி அளவில் நியூடெமோஹனி மற்றும் நியூ மைனிகுரி ரயில் நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டது.

12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. ஒரு ரயில் பெட்டி பக்கவாட்டில் விழுந்தது. ஒரு ரயில் பெட்டி மீது ஏறி மற்றொரு பெட்டி கீழே விழுந்தது.

பயணிகளில் 9பேர் இறந்தனர் பலர் காயமடைந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 45 பேர் மைனிகுரி மற்றும் ஜல்பைகுரியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இறந்தவர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் ரயில்வே நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று வடகிழக்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநில நிர்வாகம் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செல்வார் என்று கூறப்படுகிறது.