பாஜகவுடன் தொடர்பு: உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2022 11:48

புதுடில்லி, ஜனவரி 13,

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்தியாயா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உத்தரகாண்ட் மாநில கட்சி விவகாரங்களுக்கு பொறுப்பான தேவேந்தர் யாதவ் இந்த ஒழுங்கு நடவடிக்கையை  எடுத்துள்ளார்.


பாரதீய ஜனதா மற்றும் அரசியல் கட்சிகளுடன் ரகசிய தொடர்பு வேண்டாம் உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் அதற்கு எதிராக நீங்கள் செயல்படக்கூடாது என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தனது பாதையை கிஷோர் மாற்றிக் கொள்ளாத காரணத்தினால் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக தேவேந்தர் யாதவ் அறிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்த்தும் பாரதீய ஜனதாவுடன் கிஷோர் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது அதன் விளைவாகவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.