நியூயார்க் விமான நிலையத்தில் சீக்கிய டிரைவர் மீது தாக்குதல்: அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம்

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2022 15:17

நியூயார்க் ஜனவரி 9

நியூயோர்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தன்னுடைய காருடன் நின்றுகொண்டிருந்த சீக்கிய டிரைவர் இருமுறை தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் உடனடியாக மீட்டரில் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக அமெரிக்க வெளியுறவுத்துறை புகார் செய்ததை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை இன அடிப்படையிலான இந்த வன்முறைத் தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்தது.

நியூயார்க் நகரில் நடந்த சம்பவம் தெளிவும் கவலை தருவதாக உள்ளது அமெரிக்கா அவனின் பன்முகத்தன்மை அதனுடைய வழிவகை செய்கிறது எனவே வெறுப்பின் அடிப்படையிலான வன்முறை எதுவாக இருந்தாலும் அமெரிக்கா வன்மையாக கண்டனம் செய்கிறது என்று ட்விட்டரில் வெளியுறவுத்துறை செய்தியை பதிவு செய்தது.

கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து ஏராளமான கண்டனங்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.