ஒமைக்ரான் அச்சத்தால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவு

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2021 23:49


மும்பை/புதுடில்லி, டிசம்பர் 6,

உலகில் உள்ள 14 நாடுகளுக்கு மேல் உருமாறிய புதிய கரோனா வைரஸான ஒமைக்ரான் பரவியதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 949 புள்ளிகளை இழந்தது. அதன் மொத்த மதிப்பு 1.65 சதவீதமாகும். சரிவுக்கு பின்  56747 புள்ளிகளில் சென்செக்ஸ் நிலைபெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டின் கீழ் வரும் 30 நிறுவனங்களின் பங்குகளும் இன்று இழப்பை சந்தித்தன. இவற்றில் மிக மோசமாக சரிவை சந்தித்தது இண்டஸ்இண்ட் பாங்கு ஆகும். அதன் பங்கு மதிப்பு 3.66 சதவீதம் சரிந்தது.

தில்லி தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 குறியீடு என்று 284 புள்ளிகளை இழந்தது. அதன் இழப்பு 1.65 சதவீதமாகும். இறுதியில் 16 912 புள்ளிகளில் நிலைபெற்றது.

இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் திங்கட்கிழமையன்று சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பு சரிவு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் நாணயமாற்று மதிப்பு என்று 30 பைசா சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை வர்த்தகத்துக்கு பின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75. 12 பைசாவாக இருந்தது.

திங்கட்கிழமையன்று வர்த்தகத்துக்கு பின் டாலருக்கு எதிரான ரூபாயின் மாற்று மதிப்பு 75.32ல் நிலைபெற்றது.

திங்கள் அன்று டெல்லியில் தங்க விலை 10 கிராமுக்கு பத்து ரூபாய் அதிகரித்தது.

10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூபா 47510 ஆகும்.

10 கிராம் 22 காரட்  தங்கத்தின் விலை ரூபா 46 510 ஆகும்.