வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 2 ஆயிரத்தை தாண்டியது

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2021 19:54

சென்னை. டிசம்பர் 2

பெட்ரோலிய எரிபொருள் விலை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலையை புதன்கிழமையன்று (1-12-2021) ரூ.101.50 உயர்த்தியது. அதனால் எல்பிஜி வர்த்தக சிலிண்டர்களின் விலை சென்னையில் ரூ 2278ஆக உயர்ந்தது.

டெல்லியில்19 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விலை ரூ.2101 ஆக உயர்ந்தது.

கேரள மாநிலத்தில் 19 கிலோ  கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விலை ரூ.2113 ஆக உயர்ந்தது.

நடப்பு ஆண்டில் இதுவரைரூ 775  விலை உயர்ந்துள்ளது.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 660 ஆகும்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 952 ஆகும்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 1410 ஆகும்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 2278 ஆகும்.