பொங்கல் பரிசு தொகுப்பில் 2.15 கோடி மி.லி. நெய் ரெடி - ஆவின் தகவல்

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 12:16

சென்னை

2022ம் ஆண்டு தை பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்புக்காக  2 கோடியே 15 லட்சம் மி.லிட்டர் அளவு கொண்ட நெய் பாட்டீல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டு தை பொங்கல் பண்டிகைக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பரிசுபொருள் தொகுப்பில் ஆவின் சார்பில் தயாரிக்கப்படும் நெய்யும் வழங்கப்படும் என்றும்   இதற்காக ஆவின் மூலம் 2 கோடியே 15 லட்சத்து 100 மில்லி லிட்டர் நெய் பாட்டீல்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் ஆவின் நெய் விற்பனை மூலம் ரூ. 135 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் இதன் மூலம் 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.