நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021இல் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுதல் – தலைமை கழகம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 10:27

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021இல் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெறுதல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று (25-11-2021) அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நகரப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுக உறுப்பினர்கள் 26-11-2021 முதல் 28-11-2021 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் விவரம் வருமாறு