மத்திய அரசு இயற்றிய 4 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2021 22:20

மத்திய அரசு இயற்றிய 4 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை

புதுடில்லி.நவம்பர் 24

மத்திய அரசு இயற்றிய 4 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

மத்திய தொழிலாளர் துறை 2019ஆம் ஆண்டு 2020ஆம் ஆண்டு தொழிலாளர் தொடர்பான சட்டங்களை தொகுத்து எண்ணிக்கையை குறைப்பதற்காக என்று புதிய தொழிலாளர் சட்டங்களை இயற்றியுள்ளது.

 இந்தச் சட்டங்கள் ஏற்கனவே உள்ள சட்டங்களின் தொகுப்புகளாக அமையவில்லை மாறாக இவை தொழிலாளர்களை உரிமைகளை பறிக்கும் சட்டங்களாக அமைந்துள்ளன.

தொழிற்சங்கங்கள் இந்த சட்டங்களை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர் ஆனால் மத்திய அரசு தொழிலாளர் போராட்டங்களை அலட்சியம் செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியது என்று என்று ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜித் தெரிவித்துள்ளார்.


1.தொழிலாளர் சம்பளம்,

2.தொழிலாளர் சமூக பாதுகாப்பு,

3.தொழிற்சாலையில் பாதுகாப்பு,

4.தொழில் உறவுகள்

ஆகிய நான்கு தலைப்புகளில் தொழிலாளர்கள் சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்தச் சட்டங்களின் அடிப்படையில் அரசுகள் தங்கள் மாநிலத்தில் சட்டங்களை அமல் செய்வதற்கு உரிய விதிகளை வகுத்து அறிவிக்கவேண்டும். எல்லா மாநிலங்களிலும் இன்னும் நிறைவு பெறவில்லை மாநில அரசும் விதிகளை இன்னும் இறுதி செய்யவில்லை பொருத்தமான நேரத்தில் இந்த விதிகள் இறுதி செய்யப்படும் என்று தொழிலாளர் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்று விவசாயச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற காரணமாக விவசாயிகளின் போராட்டம் அமைந்தது.

மத்திய அரசு இயற்றிய 4 தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெறும்படி தொழிற்சங்கங்கள் கோரத் தொடங்கியுள்ளன.

நாளை-நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு புதுடெல்லியில் கூட உள்ளது இந்த கூட்டத்தில் மத்திய அரசு இயற்றியுள்ள தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்த தீர்மானிக்கப்பட உள்ளது என்று ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜித் தெரிவித்துள்ளார்.

 

குளிர்கால கூட்டத்தொடரின் போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்துள்ளனர் வியாழனன்று டெல்லியில் நடைபெறும் தொழிற்சங்க தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் விவசாயிகளின் சம்யுக்த கிசான் மூத்த தலைவர்களை சந்தித்து பேச தொழிற்சங்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விவசாய அமைப்புக்களுடன் இணைந்து போராட தொழிற்சங்கங்களும் இப்பொழுது தயாராகி உள்ளன.

மத்திய அரசு இயற்றிய 4 தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிலாளர் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் கூட அதிருப்தி தெரித்துள்ளது. அரசு இயற்றிய தொழிலாளர் சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான இரண்டு சட்டங்களை பொருத்தமட்டில் பாரதிய மஸ்தூர் சங் முழுக்க உடன்பாடு தெரிவிக்கிறது, ஆனால் மீதமுள்ள இரண்டு சட்டங்கள் தொழிலாளர்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை. அந்த சட்டங்கள் தொடர்பாக பல கருத்துக்கள் பாரதிய மஸ்தூர் சங்கத்திற்கு உடன்பாடானவை அல்ல என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் பினய் குமார் சின்கா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இயற்றிய புதிய தொழிலாளர் சட்டங்களை அமல் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு விருப்பமும் இல்லை. அரசியல் ஆர்வமும் இல்லை என்று ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜித் தெரிவித்துள்ளார்.

மத்திய தொழிலாளர் துறை உயர் அதிகாரி ஒருவரும் இந்த சட்டங்களை உடனடியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு இயற்றிய தொழிலாளர் சட்டங்களை அமல் செய்வது குறித்து மத்திய தொழிலாளர் துறைக்கும் மத்திய அரசுக்கும் அரசியல் ஆரம்பம் எதுவும் இல்லை என்று பினய் குமார் சின்ஹாவும் கூறியுள்ளார்.