2022 மார்ச் வரை 5 கிலோ இலவச ரேஷன்: மத்திய அமைச்சரவை தீர்மானம்

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2021 20:12

புதுடெல்லி, நவம்பர் 24,

2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்கும் பிரதமர் வறுமை ஒழிப்பு இலவச உணவு தானிய திட்டத்தை நீடிப்பது என்று மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்தது.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்குவது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது பின்னர் இந்தத் திட்டம் 5 முறை நீடிக்கப்பட்டது.

நான்காவது முறையாக அமல் செய்யப்பட்ட இந்த 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருவதாக இருந்தது.

உணவுத்துறை செயலாளரும் இலவச உணவு தானியத்தில் நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் இதை மேலும் நீடிப்பது என மத்திய அரசு இதுவரை முடிவு செய்யவில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்னர் கூறினார்.

இதற்கு இடையில் கடந்த 20ஆம் தேதி ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

மத்திய அரசு செய்து வரும் 5 கிலோ இலவச உணவு மானியத் திட்டத்தை மேலும் 8 மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம் எழுதினார்.

மத்திய இலவச உணவு தானிய திட்டத்தை வரும் மார்ச் மாதம் வரை நீடிப்பது என்று மத்திய அமைச்சரவை புதன்கிழமை யன்று முடிவு செய்துள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அமைச்சரவை முடிவுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது இலவச ரேஷன் திட்டத்தை மார்ச் மாதம் வரை நீடிக்கும் மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் மத்திய விவசாய சட்டங்கள் மூன்றினையும் ரத்து செய்வதற்கான மசோதா நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் தாகூர் தெரிவித்தார்.